
சுப வீரபாண்டியன் பற்றி பகிரப்படும் ஒரு புகைப்பட பதிவை ஃபேஸ்புக்கில் கண்டோம். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த புகைப்படத்தை பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
‘கள்ளக்காதல்’ என்று சொல்லாமல் ‘திருமணம் கடந்த உறவு’ என்று சொல்லுங்கள், என சமீபத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசியிருந்தார். அவரது கருத்து பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான், மேற்கண்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதில் இருப்பவர் சுப வீரபாண்டியன் இல்லை என்பது சற்று கவனமாகப் பார்த்தாலே தெரிந்துவிடும். இருந்தாலும், சாமானிய ஃபேஸ்புக் வாசகர்கள் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது.
எனவே, இதன் உண்மையான புகைப்படத்தை வைத்து ஒப்பீடு செய்ய முடிவு செய்தோம். இதன்பேரில், சுப வீரபாண்டியன் ஆதரவாளர்கள் சிலர் இதற்குப் பதில் தெரிவித்து வெளியிட்ட பதிவுகளில் ஒன்றை இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

எனவே, சுப வீரபாண்டியன் மீதான தனிப்பட்ட கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் இத்தகைய போலியான புகைப்படத்தை தயாரித்து பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது. அரசியல் காரணத்திற்காக இவ்வாறு சித்தரித்துள்ளனர். இதனை யாரும் உண்மை என நம்பி பகிர வேண்டாம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் செய்தியில் தவறான புகைப்படம் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
