‘’நியூஸ் 18 பிரபலம் செந்தில், மாரிதாஸ் பற்றி வெளியிட்ட ட்வீட்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

ஆகஸ்ட் 18, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், நியூஸ் 18 செந்தில் புகைப்படம் மற்றும் அவரது பெயரில் உள்ள ட்விட்டர் ஐடி ஒன்று பகிர்ந்த பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள ஸ்கிரின்ஷாட் மேலோட்டமாகப் பார்த்தால், நியூஸ் 18 பிரபலம் செந்தில் வெளியிட்டுள்ளதைப் போன்றே உள்ளது.

ஆனால், யதார்த்தம் என்னவெனில், இது போலியான ட்வீட்டாகும். எப்படி என்று கேட்கிறீர்களா? இதில் ஒரு சின்ன சுவாரசியம் மறைந்துள்ளது.

ஆம். குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட்டில் உள்ள ட்விட்டர் ஐடியின் பெயர் @Senthilvel89 என உள்ளது. அத்துடன், புரொஃபைல் புகைப்படத்தையே பதிவிலும் பகிர்ந்து, காலை வணக்கம் நண்பர்களே, என்று எழுதியுள்ளனர். இது சம்பந்தப்பட்ட நபரை கேலி செய்வது போல உள்ளது.

இதில் உள்ள ட்விட்டர் ஐடியை (@Senthilvel89) தேடிப் பார்த்தோம். ஆனால், அந்த கணக்கு பயன்பாட்டில் இல்லை என தெரியவந்தது. யாரோ ஒருவர் விஷமத்தனமாக இதனை ஆரம்பித்திருக்கலாம். மற்றவர்கள் ரிப்போர்ட் அடித்து இதனை முடக்கியிருக்கலாம்; அல்லது சம்பந்தப்பட்ட நபரே இதனை கைவிட்டிருக்கலாம், என்று தெரிகிறது.

இதற்கடுத்தப்படியாக, நியூஸ் 18 பிரபலம் செந்தில் பயன்படுத்தும் உண்மையான ட்விட்டர் ஐடியை தேடிப் பார்த்தோம். அப்போது, அவரது பயனாளர் ஐடி @Senthilvel79 என உள்ளதாக, தெரியவந்தது.

எனவே, இது போலி ட்விட்டர் ஐடியை வைத்து பகிரப்பட்ட தகவல் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:‘நியூஸ் 18’ பிரபலம் செந்தில் பற்றி பரவும் போலியான ட்வீட்!

Fact Check By: Pankaj Iyer

Result: False