நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாரா?
‘’பாஜக.,வுக்கு ஆதரவு தெரிவித்த ஹிரித்திக் ரோஷன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ போடுடா வெடியை,...
பாஜக விற்க்கு ஆதரவாக களமிறங்கிய ஹிரித்திக் ரோஷன் 🔥🔥🔥
#VoteForNDA,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று, தெரியவந்தது.
ANI Tweet Link l Times of India Link
இதன்படி, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெலுங்கு சினிமா நடிகர் நிதின் குமார் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படம்தான் இது என்று தெரியவருகிறது. இதுபற்றி ஜே. பி.நட்டா ட்வீட் ஒன்றும் வெளியிட்டிருக்கிறார்.
எனவே, நடிகர் நிதின் குமார் மற்றும் ஜே.பி. நட்டா இருவரும் சந்தித்துப் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்து, ஹிரித்திக் ரோஷன் பாஜக.,வுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளதாக, வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: ALTERED