‘’மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என #என்தளபதி அவர்கள் அறிக்கை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. அந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:
மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

கழக நிர்வாகிகளும் - கூட்டணிக்கட்சி நிர்வாகிகளும் விழிப்போடு இருக்க வேண்டும்
- தி.மு.க தலைவர் #என்தளபதி அவர்கள் அறிக்கை ...

Archived Link

இந்த பதிவு நேற்று (ஏப்ரல் 21) வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள வார்த்தைகளின் அடிப்படையில், பதிவின் உண்மைத்தன்மை பற்றி யோசிக்காமல் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கு (வேலூர் தவிர) கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதன்பின், அனைத்து இடங்களிலும் இருந்து எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேகரிக்கப்பட்டு, அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், பெண் தாசில்தார் உள்ளிட்ட சில அதிகாரிகள், அதிகாலை 3 மணியளவில் உள்ளே நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டதாக, புகார் எழுந்துள்ளது.

இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இவ்விவகாரத்தில், தமிழக அரசு மீது பல்வேறு தரப்பிலும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரே நாளுக்குள், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவும் வெளியாகியுள்ளது. எனவே இது உண்மையாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. எனவே, மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று இதுதொடர்பாக ஏதேனும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என பார்த்தோம். அங்கே, இப்பதிவில் குறிப்பிட்டுள்ளபடியே, எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பது தொடர்பாக, திமுக.,வினர், கூட்டணி கட்சியினர் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தி, மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தது.

Archived Link

எனவே, மதுரையில் நடைபெற்ற தேர்தல் விதிமுறை புகாரின் அடிப்படையில், மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், அதனை மேற்கோள் காட்டியே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவும் பகிரப்பட்டுள்ளது என, சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மைதான் என உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்து, வாக்குப் பதிவை பலரும் எதிர்பார்த்துள்ளதால், இந்த தகவல் ஃபேஸ்புக்கில் வைரலாகியுள்ளதை உணர முடிகிறது.

Avatar

Title:மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை உண்மையா?

Fact Check By: Parthiban S

Result: True