தேவ மாதா மேரி கரு தரித்த நாள் டிசம்பர் 8: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

ஆன்மீகம் சமூக ஊடகம் | Social

‘’தேவ மாதா மேரி கரு தரித்த நாள் டிசம்பர் 8,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link 

Dumeels என்ற ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை நவம்பர் 7, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இந்த பதிவில், காலண்டர் தேதிகளின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘இந்த டவுட் யாராவது கிளியர் பண்ணுங்க‘ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள காலண்டரில் உள்ள தகவல் தவறாகும். இதுபற்றி நாமும் சில ஆன்லைன் காலண்டர் தேதிகளை ஆய்வு செய்தோம். அனைத்திலுமே டிசம்பர் 8 தேவமாதா கருவுற்ற நாள் என்றே குறிப்பிட்டுள்ளனர். 

Online Calendar Link

ஆனால், இது தவறு என்றே தெரியாமல் பலரும் ‘’தேவமாதா கருவுற்ற திருநாள்‘’ எனக் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அது கிறிஸ்தவர்களால் வணங்கப்படும் தேவ மாதா மேரி கருத்தரித்த நாள் இல்லை, அது மேரியின் தாய் கருத்தரித்த நாளாகும்; அதாவது, மேரியின் தாய், மேரியை கருவாகக் கொண்ட நாள். 

Biblelight Article Link

கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்படி தேவமாதா மேரியின் தாய் எவ்வித பாவத்திற்கும் ஆள்படாமல் பரிசுத்தமாக அவரை கருவில் உட்கொண்டதை குறிப்பிடும் நாளாகக் கருதப்படுகிறது.

Wikipedia Tamil LinkWikipedia English Link

இதன்படி, ஓராண்டின் டிசம்பர் 8ல் கருத்தரித்த மேரியின் தாய், அடுத்த ஆண்டு செப்டம்பர் 8ல் மேரியை பெற்றெடுக்கிறார். இதனை கிறிஸ்தவர்கள் ஒரு மரபாக பின்பற்றுகின்றனர். 

Wikipedia Tamil Link

இதுபோலவே, ஆண்டுதோறும் டிசம்பர் 25 இயேசு கிறிஸ்து பிறந்த நாளாக (கிறிஸ்துமஸ்) கொண்டாடப்படுகிறது. 

எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள தகவலில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் என தெரியவருகிறது. காலண்டர் அச்சிடுபவர்களே நடைமுறை உண்மை தெரியாமல் தவறாக அச்சிட்டுள்ள நிலையில், அதனை மேற்கோள் காட்டி இந்த ஃபேஸ்புக் பதிவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்படி, செப்டம்பர் 8ம் தேதி மேரி மாதா பிறந்த நாளாகும்; டிசம்பர் 8ம் தேதி மேரியின் தாய் கருத்தரித்த நாள்; டிசம்பர் 25ம் தேதி இயேசு கிறிஸ்துவை மேரி பெற்றெடுத்த நாள் என பின்பற்றப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:தேவ மாதா மேரி கரு தரித்த நாள் டிசம்பர் 8: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False