மு.க.ஸ்டாலின் பற்றி பகிரப்படும் பழைய செய்தி!

அரசியல் தமிழ்நாடு

‘’மு.க.ஸ்டாலின் 6 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறினார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

செப்டம்பர் 11, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், மு.க.ஸ்டாலின் பற்றி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, சன் டிவி, மாறன் சகோதரர்களின் சொத்து விவரம் உள்ளிட்டவற்றை பற்றியும் விமர்சித்து எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல்கள் உண்மையா, பொய்யா என்பது பற்றி நாம் ஆய்வு செய்யவில்லை. அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக, ஒருவரை பற்றி மற்றவர்கள் விமர்சிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், பழைய நியூஸ் கார்டை தற்போது பகிர்ந்து, அதனை மேற்கோள் காட்டி தகவல் பகிர்வது மற்றவர்களை குழப்பக்கூடிய செயலாகும். 

2018ம் ஆண்டில் வெளியான புதிய தலைமுறை செய்திதான் இது. இதே செய்தியை மற்ற ஊடகங்களும் அப்போதே வெளியிட்டிருக்கின்றன. 

Dinamani News LinkDinakaran News Link 

6 மாதத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று, 2018ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். அந்த நியூஸ் கார்டை எடுத்து, தற்போது பேசியதுபோல பகிர்ந்து, ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பி வருகின்றனர்.

தற்போதைய சூழலில், மு.க.ஸ்டாலின் பேசியது என்னவெனில், ‘’திமுக அடுத்த 8 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்,’’ என்பதுதான். அந்த செய்தியை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  

Dailythanthi News Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

மு.க.ஸ்டாலின் 2018ம் ஆண்டில், இன்னும் 6 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்று பேசியிருந்தார். அந்த நியூஸ் கார்டை எடுத்து, தற்போதைய அரசியல் நிகழ்வுடன் இணைத்து தகவல் பகிர்ந்துள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பழைய செய்தியை பகிர்ந்துள்ளதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:மு.க.ஸ்டாலின் பற்றி பகிரப்படும் பழைய செய்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •