போராட்டம் செய்த ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்: உண்மை அறிவோம்!

அரசியல் சமூக ஊடகம்

‘’போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

TMMK News எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ள தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து கடுமையான போராட்டத்தை, எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன. இதில், டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இதையொட்டி பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அதில் ஒன்றுதான் நாம் ஆய்வு செய்யும் மேற்கண்ட வீடியோ பதிவும். உண்மையில், அது இப்போது நிகழ்ந்த சம்பவம் பற்றியது அல்ல.

குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை தனியாக பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது 2014ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் என தெரியவந்தது. 

2014ம் ஆண்டு அப்பாவி மக்களிடம் எப்படி டெல்லி போலீசார் நடந்துகொள்கிறார்கள் என்று கூறி, ஆம் ஆத்மி கட்சி பிரத்யேகமாக வெளியிட்ட வீடியோதான் இது. இந்த வீடியோவில் இளைஞரை தாக்கும் போலீசார் 3 பேரும் அப்போதே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதுபற்றி பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 

India Today News Link Rediff News Link The Guardian Link

எனவே, 2014ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் வீடியோவை தற்போதைய அரசியல் நிகழ்வுக்கு ஏற்ப பகிர்ந்து தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:போராட்டம் செய்த ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்: உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

2 thoughts on “போராட்டம் செய்த ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்: உண்மை அறிவோம்!

  1. இவை அனைத்தும் பொய் என்றால் உண்மை புகைப்படத்தை வெளியிடுங்கள்,சுதந்திரம் இல்லாத நாடாகவே இந்திய மாற்றப்படுகிறது

Comments are closed.