
‘’லஞ்சம் வாங்கிய பாஜக தலைவர்கள் பட்டியலை வெளியிடுவோம்,’’ என்று ஸ்டெர்லைட் நிறுவனம் மிரட்டியதாகக் கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
என்பவர் பகிர்ந்துள்ள இந்த ஃபேஸ்புக் பதிவை, சுமார் 10,000 பேர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பார்க்கும்போதே, இது தவறாக சித்தரிக்கப்பட்ட நியூஸ் கார்டு என தெளிவாக தெரிகிறது. தங்களிடம் இவரிவர் பணம் வாங்கினார்கள் என்று எந்த தொழில் நிறுவனமும் வெளிப்படையாக தெரிவிக்க விரும்பாது. அப்படியிருக்க, வேண்டுமென்றே பாஜக தலைவர்கள் பணம் வாங்கியதாக் கூறி அவர்களின் விவரம் வெளியிடுவோம் என ஸ்டெர்லைட் தெரிவித்ததாக, இந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் புதிய தலைமுறை ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருப்பதால், உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்வதைக் காண முடிகிறது.
ஏற்கனவே இதுபோல, ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்றவர்கள் எனக் கூறி ஒரு போலியான பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதனை போலியான தகவல் என நாம் ஆய்வு செய்து நிரூபித்துள்ளோம். அந்த செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
FactCrescendo Tamil News Link |
இதுபோலவே மேற்கண்ட நியூஸ் கார்டில் கூறப்பட்டுள்ள தேதியான 24-05-2019 அன்று ஏதேனும் புதிய தலைமுறை ஊடகம் செய்தி வெளியிட்டதா என விவரம் தேடினோம். ஆனால், அந்த தேதியில் செய்தி எதுவும் வெளியாகவில்லை என்றாலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதும், அதையொட்டி தமிழகம் முழுக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றதும் நிகழ்ந்தன.
அந்த பரபரப்பை ஒட்டியே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் பகிரப்பட்டதை உணர முடிகிறது.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புதிய தலைமுறை வெளியிட்ட சில செய்திகளின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
PuthiyaThalaimurai Link 1 | PuthiyaThalaimurai Link 2 |
இதுதவிர ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக புதியதலைமுறை வெளியிட்ட ஏராளமான நியூஸ் கார்டுகளின் விவரம் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இப்படி 2018, மே 24 அன்று புதிய தலைமுறை வெளியிடாத செய்தியை, அதே பெயரில் போலியாக தயாரித்து பகிர்ந்துள்ளதை காண முடிகிறது. இதுபற்றி fotoforensics இணையத்தில் பதிவேற்றி உறுதிப்படுத்திய விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தங்களிடம் பணம் வாங்கிய பாஜக தலைவர்கள் பட்டியலை வெளியிடுவோம் என எங்கேயும் கூறவில்லை என்பது தெளிவாகிறது. இதுதவிர, ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் வாங்கிய திமுக ஆதரவு அரசியல்வாதிகள் என்ற தலைப்பில் ஒரு வதந்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தது. அதனை எதிர்கொள்ளும் வகையில் மாற்று அரசியல் கருத்து உள்ளவர்களால் இந்த தகவல் பகிரப்பட்டதை புரிந்துகொள்ள முடிகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி, தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உண்மை என நம்பி மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:லஞ்சம் வாங்கிய பாஜக தலைவர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் மிரட்டியதா?
Fact Check By: Pankaj IyerResult: False
