
‘’பெற்றோரின் பணம் 50 ஆயிரத்தை திருடி நாம் தமிழர் கட்சிக்காக கொடுத்த இளைஞர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
ஆமைக்கறி சைமன் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 10, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதில், ‘’நாம் தமிழர் கட்சிக்காக பெற்றோரின் பணம் 50 ஆயிரத்தை திருடி அனுப்பிய இளைஞர்- #பெற்றோர் போலிஸில் புகார், நீ தமிழனா இருந்தா எனக்கு பணம் அனுப்புனு சொன்னேன். லூசு பையன் அனுப்பிட்டான்… புஹா. ஹா. ஹா.,’’ என்று கூறி, கீழே சீமான் படத்தை வைத்துள்ளனர். சீமான் இதைச் சொல்லி சிரிப்பது போல உள்ளது. உண்மையில், வேறு யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இங்கு மறு பகிர்வு செய்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். இவரை பற்றி நாள்தோறும் புதுப்புது வதந்திகளும், பரபரப்புச் செய்திகளும் வெளியாவது வழக்கம். குறிப்பாக, இவர் ஈழம் சென்று பிரபாகரனை சந்தித்தபோது, ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொன்னதை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இவரைப் பலரும் சராமரியாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இதில் பலர் உண்மை என்னவென்றே தெரியாமல் தொட்டதுக்கு எல்லாம் சீமான்தான் காரணம் என்பது போல வதந்தி பரப்புவதை வேலையாகச் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகி உள்ளது. இதனை பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் ஐடியின் பெயர் ஆமைக்கறி சைமன் 3.0 என உள்ளது. இதன்படி, இந்த ஐடி சீமானை விமர்சிக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இவர்கள் குறிப்பிடுவது போல ஏதேனும் ஒரு செய்தி உண்மையில் வெளியாகியுள்ளதா என கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவே இல்லை.
எனவே, இதுதொடர்பாக, சந்தேகத்தின் பேரில், நாம் தமிழர் கட்சி பிரதிநிதி ஒருவரிடம் பேசினோம். அவரோ, ‘’சமூக ஊடகங்களில் எங்கள் கட்சி பற்றி வதந்தி பரப்புவதையே பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். சீமான் உண்மையைப் பேசுகிறார். அதை தாங்க முடியாத சிலர் வேண்டுமென்றே அவர் மீது தவறான தகவல்களை பரப்பி மக்களிடம் அவரது நற்பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்கள்,’’ என ஒரேயடியாக மறுத்துவிட்டார்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்த்தால், சீமானைப் பிடிக்காது என்ற காரணத்திற்காக, ஆதாரமே இல்லாத வகையில் ஒரு செய்தியை தாங்களே தயாரித்து இவ்வாறு சிலர் பகிர்ந்து வருவதாக தெரியவருகிறது. நகைச்சுவை என்ற பெயரில், குறிப்பிட்ட நபர் மற்றும் அரசியல் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியாகவே இது உள்ளது. This is an ideal opportunity to twofold down on your examples about concluding what makes a difference (and putting something aside for that) versus consistent moment satisfaction & fake ids purchased from the best fake id websites online .
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பெற்றோர் பணத்தை திருடி நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்த இளைஞர்: உண்மை அறிவோம்!
Fact Check By: Pankaj IyerResult: False
