
‘’மோடிக்கு எதிராக பிபிசி ஆவணப்படம் தயாரித்த நபரை ஏற்கனவே நேரில் சந்தித்த ராகுல் காந்தி ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் என்ற நமது வாட்ஸ்ஆப் (+91 9049044263) எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, இதனை உண்மை என நம்பி ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குஜராத் மாநிலத்தில், நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில், 2002ம் ஆண்டு ஏற்பட்ட மதக்கலவரத்தில், ஏராளமான அப்பாவிகள் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், இங்கிலாந்தைச் சேர்ந்த சிலரும் உயிரிழந்திருப்பதால், அதற்கான முழு காரணம் பற்றி விரிவான விசாரணை நடத்தி, தகுந்த ஆதாரங்களுடன் ஒரு முழு நீள ஆவணப்படம் ஒன்றை பிபிசி ஊடகம் சமீபத்தில் வெளியிட்டது.
ஆனால், இந்த ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம் பார்ப்பவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், பெரும் அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், ‘’இந்த ஆவணப்படத்திற்கு நன்கொடை அளித்து, மோடிக்கு எதிராக வெளியடும்படி, பிபிசிக்கு ஐடியா கொடுத்ததே காங்கிரஸ் கட்சிதான், சமீபத்தில் ராகுல் காந்தி பிபிசி தயாரிப்பாளரை நேரில் சந்தித்துப் பேசியதற்கான புகைப்பட ஆதாரம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பரப்புகிறார்கள்.
உண்மையில், இது தவறான தகவலாகும். ராகுல் காந்தியுடன் இருப்பது பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் Jeremy Corbyn மற்றும் இந்திய முதலீட்டாளர் Sam Pitroda ஆவர்.
கோர்பைனை ராகுல் நேரில் சந்தித்த விவகாரம் பற்றி ஏற்கனவே ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது.

thehindu link l hindustantimes link
ஆனால், குறிப்பிட்ட பிபிசி ஆவணப்படத்தை தயாரித்த நபரின் பெயர் வேறு.

இதுபற்றி நமது மலையாள மொழிப் பிரிவினர் ஏற்கனவே வெளியிட்டுள்ள ஃபேக்ட்செக் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Factcrescendo Malayalam Link
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:மோடிக்கு எதிராக பிபிசி ஆவணப்படம் தயாரித்த நபரை ராகுல் காந்தி சந்தித்தாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
