
‘’எடப்பாடி நீ மோசமா சாவ,’’ என்று ஆ.ராசா சாபம் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த செய்தியை நமது வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர்.
இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.

தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மீண்டும் ஒரு அருவருப்பான பேச்சு..! எடப்பாடி நீ உன் அம்மா விட மோசமா சாவ… திமுக ஆ.ராசா,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு விறுவிறுப்பாக தேர்தல் பிரசாரத்தில், அரசியல் தலைவர்கள் ஈடுபட்டனர். இதன்போது, திமுக.,வைச் சேர்ந்த ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி ஆபாசமாகப் பேசியதாக, சர்ச்சை எழுந்தது. இதன்பேரில், பல்வேறு தரப்பிலும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனை பின்பற்றி, மேற்கண்ட நியூஸ் கார்டும் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில், இது போலியாக உருவாக்கப்பட்டதாகும். ஆ.ராசா இவ்வாறு பேசவில்லை.
இதுகுறித்து நாம் முதலில், தந்தி டிவி ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர்கள், ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் வதந்தி,’’ என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று, தகவல் தேடினோம். இதன்போது, குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலவே, அவர்கள் வெளியிட்டிருந்த உண்மையான டெம்ப்ளேட் கிடைத்தது. சரியாக, 29.03.2021 அன்று அந்த நியூஸ் கார்டு வெளியாகியிருந்தது.
இதனை எடுத்து, எடிட் செய்து, ஆ.ராசா பெயரில் போலிச் செய்தியை உருவாக்கி பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:எடப்பாடி பழனிசாமிக்கு சாபம் விட்டாரா ஆ.ராசா?- வைரலாக பரவும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: Altered
