‘’2021 ஜனவரி 1 முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் 30% உயர்வு,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

செய்தித்தாள் ஒன்றில் வந்த இந்த செய்தியை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு (+91 9049053770) அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்யும் விவரம் கிடைத்தது.

Claim Link 1Archived Link 1
Claim Link 2Archived Link 2

உண்மை அறிவோம்:
இவர்கள் கூறுவது போல, யுபிஐ பற்றி NPCI ஏதேனும் அறிவிப்பை ஜனவரி 1, 2021 முதல் அமல்படுத்த உள்ளதா என்ற விவரம் தேடினோம். அப்போது, NPCI வெளியிட்ட ஊடகச் செய்தியறிக்கை ஒன்று காண கிடைத்தது.

NPCI Press Release I Archived Link

நவம்பர் 5, 2020 அன்று NPCI வெளியிட்ட இந்த செய்தியறிக்கையில், ‘’யுபிஐ வழியாக மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் 2 பில்லியன் அதாவது 200 கோடி எண்ணிக்கையை எட்டியுள்ளன. எனவே, வரும் காலத்தில், யுபிஐ பயன்படுத்தி, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவை வழங்கும் ஆப்கள் (செயலிகள்) ஒவ்வொன்றும், மொத்த யுபிஐ சந்தையில், 30% அளவுக்கே பரிவர்த்தனை நடத்த முடியும். எஞ்சிய வர்த்தக இடைவெளி மற்ற செயலிகளுக்கும் தரப்படும். இதன்மூலமாக, யுபிஐ பணப் பரிவர்த்தனை சந்தையில் நிலவும் ஏகபோகம் அல்லது தனி நிறுவனத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, அனைத்து நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க முடியும்,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, யுபிஐ சேவையில் ஈடுபட்டுள்ள ஆப்களுக்கோ அல்லது அதனை பயன்படுத்தும் தனிநபருக்கோ கட்டணம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை/ உயர்த்தப்படவில்லை என்று தெளிவாகிறது.

மாறாக, இந்தியாவில் யுபிஐ சேவையில் ஈடுபட்டுள்ள Google Tez, BHIM, PhonePe, MobiKwik, Uber, Paytm, Chillr உள்ளிட்ட ஆப்கள், 30% வரம்புக்கு உட்பட்டு பரிவர்த்தனை சேவை வழங்க முடியும். அந்த ஆப்களால், இஷ்டம்போல யுபிஐ சேவையை வழங்கிட முடியாது. இதன்மூலமாக, ஒரு நிறுவனமே 100% யுபிஐ வழிமுறையை பயன்படுத்துவது என்ற ஏகபோகத்தை தடுக்க முடியும் என்று, NPCI தரப்பில் கூறப்படுகிறது.

Trak.in Link
இதனைச் சரியாக புரிந்துகொள்ளாமல், 30% cap என்பதை, கட்டண உயர்வு என தவறாகப் புரிந்துகொண்டு, ஊடகங்களும், தனிநபர்களும் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி, பொதுமக்களை குழப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் 30% உயர்த்தப்பட்டதாக பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer

Result: False