கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் என்று பரவும் தகவல் உண்மையா?
‘’மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் நடைபெறுகிறது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’உரிமைத்தொகை – புதிய அறிவிப்பு. ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். முதலில், நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’இதுபோன்ற செய்தி எதுவும் நாங்கள் வெளியிடவில்லை; இது எங்களது பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள போலியான நியூஸ் கார்டு’’, என்று தெரிவித்தார்.
அடுத்தப்படியாக, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் பிரிவு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதைக் கண்டோம்.
இந்த வதந்தியை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தமிழ்நாடு அரசு தரப்பில் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாநிலம் முழுக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக, அந்தந்த மாவட்ட மக்களுக்கும் தகுந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Viduthalai Daily l ETVBharat TamilNadu
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் ஒரு வதந்தி என்றும், இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False