FactCheck: பெண்களுக்கு பெரியார் 1951-ல் சொன்ன அறிவுரை என்று கூறி பகிரப்படும் வதந்தி…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’05.12.1951 அன்று குடியரசு நாளிதழில் பெரியார் பெண்களுக்கு சொன்ன அறிவுரை,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவு உண்மையா, என்று சிலர் சந்தேகம் கேட்க, இதனை பகிர்ந்தவர் உண்மைதான் என்று ஆமோதித்து கமெண்ட் பகிர்ந்துள்ளதையும் காண முடிகிறது. இது தவிர, இன்னொரு ஃபேஸ்புக் வாசகர் இந்த பதிவுக்கான ஆதாரம் என்று கூறி ஒரு தகவலை பகிர்ந்துள்ளதையும் கண்டோம். அதனை கீழே இணைத்துள்ளோம். 

இதே தகவலை மேலும் பலர் உண்மை என்று கூறி ஷேர் செய்வதையும் கண்டோம். 

உண்மை அறிவோம்: 

இதன்படி, ‘’உன்னை எதிர்க்க என்னை ஆயுதமாக்கினால்.. என் சிலையை உடைத்து அவன் தலையில் போட்டு கொன்றுவிடு! – (குடியரசு 05.12.1951),’’ என்று கருத்து உண்மையா என ஆய்வை தொடங்கினோம்.

அப்போது, திராவிடர் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி Prince Ennares Periyar என்பவர் இந்த தகவலுக்கு ஏற்கனவே விளக்கம் அளித்து ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததாக, தெரியவந்தது.

அவரது பதிவை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Facebook Post LinkArchived Link

இதன்படி, ‘’1951ல் குடிஅரசு இதழ் வெளிவரவில்லை; பெரியார் சிலையும் அமைக்கப்படவில்லை; பெரியார் இப்படி எழுதவும் இல்லை,’’ என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. 

எனவே, திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரே தெளிவாக, தகவல் குறிப்பிட்டுவிட்டதால், பெரியார் இப்படி சொல்லவில்லை என்று நமக்கும் உறுதியாகிறது.

ஏற்கனவே இதுபோல, பெரியார் பற்றி பலவிதமான வதந்திகள் பகிரப்படுவதைக் கண்டறிந்து நாம் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம். அவற்றின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Fact Crescendo Tamil Link 1

Fact Crescendo Tamil Link 2

Fact Crescendo Tamil Link 3

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

Avatar

Title:பெண்களுக்கு பெரியார் 1951-ல் சொன்ன அறிவுரை என்று கூறி பகிரப்படும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False