விஜய் தரம் தாழ்ந்தவர் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

False சமூக ஊடகம் | Social Media தமிழ்நாடு | Tamilnadu

‘’விஜய் தரம் தாழ்ந்தவர் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’தான் நல்லாட்சி நடத்தி வருவதாகவும் விஜய் தரம் தாழ்ந்தவர் என்றும் ஸ்டாலின் விமர்சனம்’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1  l Claim Link 2 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று தெரியவந்தது. முழு வீடியோ லிங்க் MK Stalin அதிகாரப்பூர்வ X வலைதளத்தில் காண கிடைக்கிறது.  

கடந்த ஆகஸ்ட் 11, 2025 அன்று பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ‘நல்லாட்சி நடத்தும் என்னை, முதலமைச்சர் என்கிற பொறுப்புக்கு மரியாதை தராமல், தரம் தாழ்ந்து, என்னை ஒருமையில் பேசி வருகின்றார் எதிர்க்கட்சித் தலைவர்,’ என்று எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டே மு.க.ஸ்டாலின் பேசுகிறார். எந்த இடத்திலும் விஜய் பெயர் இடம்பெறவில்லை. 

ஆகஸ்ட் 11, 2025 அன்று மு.க.ஸ்டாலின் திருப்பூரில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைத்து, பேசியபோது எடுத்த வீடியோதான் இது. ஆனால், விஜய் மதுரையில் மாநாடு நடத்தியது ஆகஸ்ட் 25, 2025 அன்று. எனவே, மு.க.ஸ்டாலின் பேசும் இந்த வீடியோவுக்கும், விஜய்க்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெளிவாகிறது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

The Hindu l Thanthi TV l Dinamalar 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று, நம்பகமானது இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:விஜய் தரம் தாழ்ந்தவர் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False