‘’வங்கதேசத்தில் ஜிஹாதிகளை எதிர்கொள்ள தயாராக நிற்கும் மைனாரிட்டி பெண்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ஜிஹாதிகளிடமிருந்து தற்காப்பிற்கு தயாராகிவிட்டனர் சில பங்களாதேஷ் மைனாரிட்டி பெண்கள்...’’, என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் 2024, ஜூலை 16ம் தேதி முதல் கலவரமாக மாறியது. இதில், ஆளுங்கட்சியான நவாமி லீக் நிர்வாகிகளுக்குச் சொந்தமான சொத்துகள் சூறையாடப்பட்டன. இதன் விளைவாக, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு, வெளியேறினார்.

Aljazeera Link l The Hindu Link l Money Control Link

இதற்கிடையே, அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் (முஸ்லீம் அல்லாதோர்) தாக்கப்படுவதாகக் கூறி ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இவற்றில் பல பதிவுகள் வெறும் வதந்தியாக உள்ளன. அவை பற்றி நாமும் அவ்வப்போது ஃபேக்ட்செக் செய்து வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1 l Link 2 l Link 3 l Link 4

இந்த வரிசையில் பரவும் மற்றொரு வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவலும்…

ஆம், இவர்கள், சிறுபான்மையின மக்கள் அல்ல; டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள். கடந்த ஜூலை 16, 2024 அன்று இவர்கள், மத்திய ஷஹீத் மினார் சதுக்கத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது, நவாமி லீக் கட்சியின் மாணவ அமைப்பான Bangladesh Chhatra League உறுப்பினர்கள், அங்கு வந்து மாணவ, மாணவியரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், டாக்கா பல்கலை மாணவர்கள் இவ்வாறு மிளகாய் பொடி கலந்த நீரை கையில் ஏந்தி நின்றதாக, தெரியவருகிறது.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

enews71 link

எனவே, முஸ்லீம் ஜிகாதிகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக, வங்கதேசத்தை சேர்ந்த மைனாரிட்டி இந்துப் பெண்கள் இவ்வாறு மிளகாய் பொடி கலந்த நீருடன் தயாராக உள்ளனர் என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள் என, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:வங்கதேசத்தில் ஜிஹாதிகளை எதிர்கொள்ள தயாராக நிற்கும் மைனாரிட்டி பெண்கள் என்ற தகவல் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING