
‘‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடை செய்யும் சட்ட மசோதா கொண்டுவரப்படும்,’’ என்று திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ மீண்டும் திமுக தலைமையிலான அரசு அமையும்போது திருப்பரங்குன்றம் தர்ஹா மாண்பு பேணி காக்கும் விதமாக தீபம் ஏற்றுவதை தடை செய்யும் விதமான சட்ட மசோதா கொண்டுவரப்படும்- திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி வாக்குறுதி.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது போலியானது, என்று தெரியவந்தது.

ஆம், உண்மையான நியூஸ் கார்டில்,’’மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி போட்டியிடுகிறார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, News 7 Tamil ஆசிரியர் குழு மற்றும் திமுக ஐடி பிரிவு ஆகியோரிடம் பேசி, இது உண்மையல்ல, என்று உறுதிப்படுத்தியுள்ளோம்.
மேலும், News 7 Tamil ஊடகம் இதுபற்றி மறுப்பும் வெளியிட்டுள்ளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram


