FactCheck: ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியமா இது?
‘’ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியத்தை மதிக்காமல் மோனலிசா ஓவியத்தை பாராட்டும் இந்தியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.
இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
கேரளாவைச் சேர்ந்த ராஜா ரவி வர்மா (கி.பி. 1848 - 1906), பாராட்டுகள் பெற்ற பலவிதமான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
இந்நிலையில், ரவி வர்மா ஓவியம் என்று கூறி மேற்கண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கின்றனர். அந்த புகைப்படத்தில் இருப்பவரை பார்த்தால், தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சுப்ரமணியபுரம் என்ற படத்தில் நடித்த சுவாதி ரெட்டி போல உள்ளார்.
இருந்தாலும், சந்தேகத்தின் பேரில், இந்த புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, நமக்கு pinterest இணையதளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் தொடர்பான விவரம் கிடைத்தது.
Pinterest Link I Archived Link
எனவே, இதில் இருப்பவர் சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த சுவாதி என்று தெளிவாகிறது. ராஜா ரவி வர்மா வரைந்த ஒரு ஓவியத்தை மாடலாக எடுத்துக் கொண்டு, அதனை மீள் உருவாக்கம் செய்து, இவ்வாறான புகைப்படத்தை சுவாதி எடுத்துள்ளார் என்று தெரியவருகிறது. குறிப்பிட்ட புகைப்படத்தை @sruvamstudios எடுத்ததாகக் குறிப்பிட்டு, ள்ளனர். @bridesofhyderabad என்ற இன்ஸ்டாகிராம் ஐடி பகிர்ந்துள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ரவி வர்மா ஓவியம் ஒன்றை நடிகை சுவாதியை வைத்து மீள் உருவாக்கும் செய்து, பகிர்ந்துள்ளனர். அதனை எடுத்து, ரவி வர்மா வரைந்த ஓவியம் எனக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…