செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது என்று சுகி சிவம் கூறினாரா?

‘’செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது’’ என்று சுகி சிவம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: புதியதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. […]

Continue Reading

கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட ட்விட்டர் பதிவை பலரும் உண்மையிலேயே பாஜக ஆதரவாளர்கள் அதிலும் குறிப்பாக, அண்ணாமலை ஆதரவாளர்கள்தான் […]

Continue Reading

கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றதாகப் பரவும் வதந்தி…

‘’ கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் […]

Continue Reading

அமெரிக்காவில் ரம்ஜான் தொழுகையைத் தடுத்து நிறுத்திய இந்து பெண் என்று பரவும் தகவல் உண்மையா?

அமெரிக்காவில் மசூதி ஒன்றில் ரம்ஜான் தொழுகை நடந்தபோது அதை இந்தியாவைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் தடுத்து நிறுத்தினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதியில் பெண் ஒருவர் காவலர்களுடன் தகராறு செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. கடைசியில் அவரை காவலர்கள் தரதரவென இழுத்துச் செல்கின்றனர். நிலைத் தகவலில், “அமெரிக்கா வர்ஜீனியாவில் ஆதிக்க வெறி கொண்ட […]

Continue Reading

எகிப்து பிரமிடு அடியில் இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

எகிப்து பிரமிடு ஒன்றுக்கு அடியில் இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எகிப்து பிரமிடுக்கு அருகில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அகழ்வாராய்ச்சியின் போது எகிப்தின் பிரமிடுகளுக்கு அடியில் ஒரு பழமையான இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரமிட்டின் கீழ் ஒரு இந்து சூரியக் கோயில் இருப்பதைக் காணலாம். மேலும் கோவில்களின் […]

Continue Reading

இந்து பூசாரியை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் முஸ்லீம் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ இந்து கோயில் பூசாரியை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் முஸ்லீம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு ட்விட்டர் வழியே (@FactCheckTamil) அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார்.  பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Claim Tweet Link l Archived Link  உண்மை அறிவோம்:  இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து ரிவஸ் இமேஜ் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதால் கான்பூரில் ஜடாயு பறவை காணப்பட்டதா?

‘’அயோத்தி ராமர் கோயில் கட்டுவதால் கான்பூரில் ஜடாயு பறவை காணப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263 & +919049053770) வழியே அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன் பேரில் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கிலும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறதா?

‘’ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் ஆய்வு மேற்கொண்டோம்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் சென்னை அம்பத்தூர் போலீசாரை (உதவி ஆணையர் அலுவலகம்) தொடர்பு கொண்டோம். அவர்கள் பேசுகையில், ‘’அம்பத்தூர், அயப்பாக்கம் பிரதான சாலை, […]

Continue Reading

சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள்- இந்த வீடியோ திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டதா?

‘’திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகள் முன்பாக, சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள், இதுவே திராவிட மாடல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  30/12/2022 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’பள்ளிக்குழந்தைகளை இப்படித்தான் வளர்க்கணும் , இதுவே திராவிட மாடல் , உதயநிதி ரசிகர் மன்ற தலைவரை கல்வி அமைச்சரா டங்கா மாரி தான்,’’ என்று […]

Continue Reading

ஹாலந்தில் ஆரஞ்சு பழத்தில் விநாயகர் சிலை செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதா?

ஹாலந்து நாட்டில் ஆரஞ்சு பழத்தை வைத்து பிரம்மாண்ட விநாயகர் சிலையை உருவாக்கி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆரஞ்சு பழத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதை வெளிநாட்டில் புகைப்படம் எடுப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்தி பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “உலகெங்கும் உன் அரசாட்சியே!  ஆரஞ்சு […]

Continue Reading

பெண்ணின் மானம் காத்த இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்து பெண் ஒருவரின் மானம் காத்த இஸ்லாமியர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிசிடிவி காட்சி என்று வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இளம் ஜோடி கோவிலுக்குச் சென்று திரும்புகின்றனர். பைக்-கை ஸ்டார்ட் செய்யும் போது, இளம் பெண்ணின் தாவணி இருசக்கர வாகனத்தின் டயரில் மாட்டிக்கொள்கிறது. அப்போது அந்த வழியே வந்த இஸ்லாமியத் தம்பதியினர் தாவணியை […]

Continue Reading

இந்துத்துவா மற்றும் இந்து மக்கள் ஒருநாள் உலகை ஆள்வார்கள் என்று லியோ டால்ஸ்டாய் கூறினாரா?

‘’இந்துத்துவா மற்றும் இந்து மக்கள் ஒருநாள் உலகை ஆள்வார்கள் என்று லியோ டால்ஸ்டாய் கூறியுள்ளார். இதேபோல, ஏராளமான பிரபலங்கள் இந்து மதத்தைப் பாராட்டியுள்ளனர்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் வாட்ஸ்ஆப் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் காண முடிந்தது. Facebook Claim […]

Continue Reading

தெலுங்கானாவில் இந்து மக்களின் வீட்டை தாக்க திரண்ட முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

தெலுங்கானாவில் இந்துக்களின் வீடுகளுக்குள் முஸ்லிம்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனி வழியாக உள்ளே நுழைய ஏராளமானவர்கள் முயற்சிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது நடப்பது பாகிஸ்தானில் இல்லை. தெலுங்கானாவில். இந்துக்களின் வீடுகளில் வலுக்கட்டாயமாக நுழைகின்றனர் போராளிகள். எந்த மீடியாவையும் உள்ளே நுழைய விடாமல் செய்து […]

Continue Reading

மவுண்ட் புஜி புகைப்படத்தை கைலாச மலை என்று தவறாக பரப்பும் நெட்டிசன்கள்!

ஜப்பானில் உள்ள மவுண்ட் ஃபூஜியின் வீடியோவை சீனாவின் திபெத்தில் உள்ள கைலாச மலை என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட மலை ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இப்படி ஒரு கைலாஷ் தரிசன காட்சி காணவே முடியாது…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ராஜலெட்சுமி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 19ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதைப் […]

Continue Reading

அடையாறு ஆனந்த பவன் முஸ்லீம் நபருக்கு விற்பனை செய்யப்பட்டதா?

‘’அடையாறு ஆனந்த பவனை முஸ்லீம் நபர் வாங்கியுள்ளார். ஹிந்துக்கள் மற்றும் சுத்த சைவ உணவுப் பிரியர்கள் கவனிக்கவும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக் பயனாளர்களும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையா என […]

Continue Reading

Rapid FactCheck: கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைக் குறைவு மருந்து கலந்த பிரியாணி விற்பனையா?

‘’கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைக் குறைவு மருந்து கலந்த பிரியாணி விற்ற முஸ்லீம்கள் கைது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே +91 9049053770 நமக்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட்டின் ஃபேஸ்புக் பதிவு கிடைக்கவில்லை. அதேசமயம், இதனை சிலர் ஆங்கிலத்தில், ட்விட்டரில் பகிர்வதைக் கண்டோம். Twitter Claim […]

Continue Reading

FACT CHECK: உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியருக்கு கரண்ட் ஷாக் கொடுத்து தாக்கிய காவி கும்பல் என்று பரவும் தகவல் உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரைத் திருடன் என்று கூறி 9 பேர் கொண்ட காவி கும்பல் கரண்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட் பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பி, அது பற்றி உண்மை விவரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த இணைப்பைத் திறந்து பார்த்த போது 2017ம் ஆண்டு […]

Continue Reading

FactCheck: கோவையில் கல்லூரி மாணவர்கள் பிபின் ராவத் மரணத்தை கொண்டாடினார்களா?

‘’கோவையில் கல்லூரி மாணவர்கள் பிபின் ராவத் மரணத்தை கொண்டாடினார்கள்,’’ என்று கூறி ஒரு வீடியோ செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி உண்மையா எனச் சந்தேகம் கேட்டிருந்தார். இதுபற்றி தகவல் தேடியபோது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் இதனை உண்மை போல பகிர்வதை கண்டோம். Twitter Claim Link I Archived Link […]

Continue Reading

FACT CHECK: அர்ச்சகர் நியமனத்திற்கு நீதிபதி அனிதா சுமந்த் இடைக்கால தடை விதித்தாரா?

தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் புகைப்படம் மற்றும் நீதிமன்ற உத்தரவு இணைய பிரதி ஆகியவற்றை இணைத்துப் பதிவிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக […]

Continue Reading

FACT CHECK: தமிழ்நாடு அரசு புதிதாக நியமித்த அர்ச்சகர் மது குடித்தாரா?

தமிழ்நாடு அரசு கிறிஸ்தவர் ஒருவரை புதிதாக இந்து கோவில் அர்ச்சகராக நியமித்ததாகவும், அவர் மது அருந்தியதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கோவில் குருக்கள் போல தோற்றம் அளிக்கும் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பணி நியமனம் செய்த விடியல் பார்ட்டி க்கு நன்றி.. துரசிங்க பேட்டை சிவன் கோவில் அர்ச்சகர் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் சாமி சிலையை அவமதித்தார் என்று பரவும் பழைய படம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சுவாமி சிலையை அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாமி சிலை மீது ஏறி நின்று அர்ச்சகர் ஒருவர் அலங்காரம் செய்வது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. சுவாமி சிலை மீது அவர் ஏறி நிற்கும் காட்சி […]

Continue Reading

FACT CHECK: கார், பைக் கழுவியவர்களை அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமித்ததா?

கார், பைக் கழுவிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களாக நியமித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தண்ணீரை பீய்ச்சி அடித்து கோவிலை சுத்தம் செய்யும் நபர் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கார் பைக்  கழுவுறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்குனா கடைசில இதான்டா நடக்கும்…!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தி.மு.க […]

Continue Reading

FACT CHECK: புதிய அர்ச்சகர்கள் நியமனத்தால் பழைய அர்ச்சகர்கள் கண்ணீருடன் வெளியேறினரா?

தமிழ்நாட்டில் புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்ட சூழலில் பழைய அர்ச்சகர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பதவி நீக்கம் செய்யப்பட்ட குருக்கள் கண்ணீருடன் வெளியேறினார் என்றும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இன்று அதிகாலையிலிருந்து திருச்சி நாகநாதசாமி கோவில் வயலூர் கோவில் மற்றும் சில கோவில்களில் […]

Continue Reading

FactCheck: இந்து என்.ராம் உண்மையான பெயர் நூர் ராமாதீன்?- வதந்தியால் சர்ச்சை…

‘’இந்து என்.ராம் உண்மையான பெயர் நூர் ராமாதீன்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

FactCheck: 2013ம் ஆண்டு எடுத்த கும்பமேளா புகைப்படத்தை தற்போது பகிர்வதால் குழப்பம்!

‘’2021 கும்ப மேளா புகைப்படம், மாஸ்க் முகத்திற்கு அணியாமல் கீழே கோவணம் போல அணிந்த இந்தியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், Simi Garewal என்பவர் வெளியிட்ட ட்வீட்டை ஸ்கிரின்ஷாட் எடுத்து, உண்மை போல பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:2021ம் ஆண்டில் கொரோனா வைரஸ் […]

Continue Reading

FACT CHECK: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திருமாவளவன் கூறியதாக பரவும் போலிச் செய்தி!

6 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்துக்களின் ஓட்டு தேவையில்லை என்று திருமாவளவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive திருமாவளவன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “6 தொகுதியிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்து நாய்களின் ஓட்டு தேவையில்லை பிரச்சாரத்தில் திருமாவளவன் பரபரப்பு […]

Continue Reading

FactCheck: மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகப் பரவும் வதந்தி

‘’மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இளம்பெண் ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சராமரியாக தாக்குவதோடு, அவரை சாலை நடுவே கீழே தள்ளி, உயிருடன் நெருப்பு வைத்து எரிக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு பதைபதைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால், இதனை சமூக வலைதளங்களில் பகிர்வோர் இது, மத்தியப் பிரதேசத்தில், கிறிஸ்தவ […]

Continue Reading

FACT CHECK: இந்து அறநிலையத் துறையும் பகவானும் கண்டுகொள்ளாத கோவில் அர்ச்சகர்! – விஷம ஃபேஸ்புக் பதிவு

இந்து அறநிலையத் துறையும் இறைவனும் கண்டுகொள்ளாத அர்ச்சகர் என்று ஒரு முதியவர் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வயதான அர்ச்சகர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்து அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பதில்லை . கிராமத்தில் தட்டு வருமானம் இல்லை . இறைவனும் கண்டுகொள்ளவில்லை . வயது முதுமை. பெரிய கோவில்களில் நடப்பதும் பெரிய பெரிய படிகளில் ஏறி இறங்குவதும் […]

Continue Reading

இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம் எனக் கூறி பரவும் வதந்தி…

‘’இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த ஜூலை 10, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’ கோயில்களுக்கு மின் கட்டணம் யூனிட்₹8/-. சர்ச், மசூதிக்கு,₹2.85. மதசார்பற்ற நாட்டிலே இந்த வேறுபடு ஏன்.??,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை […]

Continue Reading

இந்து பெண்களை வளர்த்து திருமணம் செய்து வைத்த முஸ்லீம் சகோதரர்; முழு விவரம் இதோ!

‘’இந்து பெண்களை தத்தெடுத்து வளர்த்து, திருமணம் செய்து வைத்த முஸ்லீம் சகோதரர்,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 23, 2020 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளனர். இதில், முஸ்லீம் நபர் ஒருவர், 2 பெண்களுடன் கண்ணீர் மல்க அரவணைத்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ மகாராஷ்டிராவில் ஒரு […]

Continue Reading