“தலைப்புச் செய்தி போட தெரியாத ஊடகங்கள்!” – ஃபேஸ்புக் பதிவின் உண்மை

நடிகர் சங்கத் தேர்தல் செய்தியை முதல் பக்கத்திலும், நதி நீர் இணைப்புத் திட்டம் தொடர்பான செய்தியை உள்ளேயும் போட்டு தமிழக ஊடகங்கள் விவஸ்தையே இல்லாமல் செயல்படுகின்றன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தினத்தந்தியில் வெளியான இரண்டு செய்திகளின் படத்தை வைத்துள்ளனர். முதல் படத்தில், தினத்தந்தியின் முதல் பக்கத்தில் நடிகர் சங்க வாக்குப் பதிவு செய்தியை வைத்துள்ளனர். […]

Continue Reading

ரூ.5 ½ லட்சம் கோடியில் நதிநீர் இணைப்புத் திட்டம்… அடுத்த மாதம் மோடி தொடங்குகிறார் – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு!

இந்தியாவில் உள்ள 60 நதிகளை இணைக்க ரூ.5.50 லட்சம் கோடியில் திட்டம் தயார் என்றும், அடுத்த மாதம் இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1  இந்தியாவில் ரூ.5.50 லட்சம் கோடி செலவில் 60-நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜூலை) 17ம் தேதி தொடங்கிவைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

“மூன்றே மாதத்தில் உடைந்த மோடி கட்டிய பாலம்…” – ஃபேஸ்புக் பதிவு கிளப்பிய பரபரப்பு!

குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும்போது அடிக்கல் நாட்டி, இந்திய பிரதமர் ஆன பிறகு திறந்துவைத்த பாலம் ஒன்று திறப்பு விழா கண்ட மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்துவிட்டது என்று ஒரு படத்துடன் கூடிய தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived link 1 I Archived link 2 உடைந்த சாலை பாலம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் […]

Continue Reading

மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டாரா?

மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால், மும்பையில் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link முகம் முழுவதும் அடிவாங்கிய நிலையில் பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி அரசின் தவறுகளை கேள்வி கேட்டதற்காக தாக்கப்பட்ட மும்பை ஊடகவியலாளர் நிகிதா ராவ். கடந்த 2 நாட்களில் காவி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட 4-வது ஊடகவியலாளர்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு விசா வழங்க மறுத்த சிங்கப்பூர்: உண்மை அறிவோம்!

பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் அரசு விசா வழங்க மறுத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை Archived link பிரதமர் மோடியின் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “விசா மறுப்பு… *** அடித்து விரட்டியது சிங்கப்பூர் அரசு” என்று உள்ளது. படத்தின் கீழ்ப் பகுதியில், “மனிதனைக் கொல்லும் மனித மிருகங்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்!” – ரஜினிகாந்த் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்” என்று ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பிழைக்க வந்த நாயின் பேச்சை பார்….இந்த லூசு பின்னாடியும் ஒரு மதி கெட்ட தமிழ் கூட்டம்…த்த்த்தூதூதூ????? Archived link நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில், “மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்” என்று உள்ளது. அதே படத்தில் மிகச் சிறியதாக, “பிரதமர் மோடிக்கு […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியது உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியதாகவும் இனியும் தேர்தல் ஆணையத்தை நம்ப முடியாது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உபியில் மீண்டும் EVM சிக்கியது..! இந்த *** தேர்தல் ஆணையத்தை நம்பி ஒரு புன்னியமும் இல்லை..!! Archived link லாரியில் நிறைய வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பயன்படும் தகர பெட்டிகள் உள்ளன. இந்த லாரியை செல்லவிடாமல் பலர் முற்றுகையிடுவது போல் மற்றொரு படம் உள்ளது. […]

Continue Reading

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததால் மோடிக்கு ஆபத்து! – தரம்தாழ்ந்த ஃபேஸ்புக் பதிவு

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்று முதல்வர் பதவிக்கு வந்தவர்கள் உடனடியாக மரணம் அடைந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில் உள்ள விவரங்களின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கடுப்பேத்துறார் மை லார்டு (Kadupethurar My Lord) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், 2019 மே 23ம் தேதி ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

மோடி கலந்துகொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவா?

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி கலந்துகொண்ட வந்தே பாரத் ரயில் பயண தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாக ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் தொடக்க விழாவுக்கு 52 லட்சம் செலவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. #pmmodi Narendra Modi #narendramodi #northernrailway #vandhebharatrail Archived link 1 Archived link 2 […]

Continue Reading