
2022 மே 2ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது, எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, இந்த பதிவு கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
I Tamil News என்ற ஆன்லைன் ஊடகம் வெளியிட்டடதாகக் கூறி மேற்கண்ட செய்தியை பலரும் கடந்த ஒரு வாரமாக பகிர்ந்துள்ளனர். இதன்பேரில், அந்த ஆன்லைன் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தபோது, இப்படியான செய்தி எதுவும் காணக் கிடைக்கவில்லை. ஒருவேளை ஷேர் செய்துவிட்டு, பிறகு தவறை உணர்ந்து இதனை நீக்கியிருக்கலாம் என தெரியவந்தது.
ஆனால், அந்த ஊடகம் அதனை தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியது கூட தெரியாமல், மற்றவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இவர்கள் கூறுவதுபோல, மே 2 , 2022 அன்று அரசு விடுமுறை எதுவும் தமிழகத்தில் அறிவிக்கப்படவில்லை. ஏப்ரல் 30ம் தேதி சனிக்கிழமை, மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் (ஞாயிறு), மே 3ம் தேதி ரம்ஜான் (செவ்வாய்) என 3 நாட்கள் விடுமுறை வருவதால், இடையில் உள்ள மே 2ம் தேதியையும் அரசு விடுமுறையாக அறிவித்தால் மக்கள் ரம்ஜானை கொண்டாட வசதியாக இருக்கும் என்று கூறி மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை ஒன்றை எழுப்பியிருந்தார். ஆனால், அரசு தரப்பில் இருந்து இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளதாக மட்டுமே ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், சிலர் அவசரத் தனமாக, மே 2ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக, தகவல் பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
இதுதொடர்பாக நாம் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாகம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை உள்ளிட்டவற்றில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:2022 மே மாதம் 2ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
