நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் வரிசையாக பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரம்மாண்ட அரங்கத்திற்குள் சிலர் இறந்தவர்கள் போல படுத்திருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Sab Rings YT என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி 18ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நேபாளத்தில் சமீபத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை வரிசையாக வைத்து இறுதி மரியாதை செலுத்தியது போன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளனர். ஆனால், வீடியோவில் இருப்பவர்களைப் பார்த்தால் நேபாளத்தைச் சார்ந்தவர்கள் போல இல்லை. மேலும், இந்த சடங்கைப் பார்க்கும் போது கம்போடியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் செய்யப்படும் சடங்கு போல இருந்தது. எனவே, இந்த வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

உண்மைப் பதிவைக் காண: rakyat.com I Archive

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அதில் நமக்கு சரியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ போன்று ஒரு நிகழ்வை சில மாதங்களுக்கு முன்பு சிலர் யூடியூபில் பதிவேற்றியிருப்பது தெரிந்தது. 

உண்மைப் பதிவைக் காண: YouTube 

இந்தோனேஷியாவின் பாலியில் ஒரு விதமான மதச் சடங்கு நடந்தது என்றும், அதில் பக்தர்கள் இறந்தவர்கள் போல் படுக்க வைக்கப்பட்டு சடங்குகள் நிகழ்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டு செய்திகள், வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோவை சிலர் யூடியூப் ஷார்ட்ஸ் ஆக வெளியிட்டிருந்தனர்.

இதன் மூலம் இந்தோனேஷியாவின் மத வழிபாட்டு வீடியோவை தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவில் உள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் என்று பரவும் வீடியோ இந்தோனேஷியாவில் நடந்த மத விழாவின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply