FACT CHECK: உ.பி இளம் பெண்ணின் உடைந்த முதுகெலும்பு எக்ஸ்ரே இதுவா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

உ.பி-யில் முதுகெலும்பு உடைக்கப்பட்டு இறந்த பெண்ணின் எக்ஸ் ரே என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண… Facebook I Archive

இடுப்புக்கு அருகே முதுகெலும்பு உடைந்த ஒருவரின் எக்ஸ்ரே படம் பகிரப்பட்டுள்ளது. அதில், UP RAPE என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது .பி யில் ஒரு சகோதரிக்கு நடந்த #முதுகுத்தண்டு முறிவு ..!

ஒரு வீட்டிற்கு எப்படி மெயின் ச்விட்ச்சில் இருந்து மின்சாரம் கம்பி வழியாக ஒவ்வொரு இடமாக பாய்ச்சப்படுகிறதோ, அதுபோல முதுகுதண்டு தான் நம் உடலில் உள்ள அனைத்து செயல்களுக்குமான வயரிங் பகிர்தலை செய்கிறது, இதில் #முறிவு என்பது, மிக மோசமான வாகன #விபத்து, மிக உயரத்தில் இருந்து #விழுதல் , போன்ற கொடூரமான காரணங்களால் தான் இவ்வகை முறிவுகள் நடக்கும்.

மருத்துவ மொழியில் சொல்லபோனால் , Spinal_fractures are usually the result of significant trauma to a normally formed skeleton, or the result of trauma to a weakened spinal column.

Examples include:

Jefferson fracture: ring fracture of C1

hangman fracture: bilateral pedicle or pars fracture of C2. Dens fracture

flexion teardrop fracture: unstable flexion fracture,Extension teardrop fracture: stable injury.

Clay_shoveler fracture: spinal process avulsion injury, 

Chance fracture: horizontal fracture through the thoracolumbar spine,

Burst fracture: always involves the posterior vertebral body cortex.

Wedge fracture: Single column anterior vertebral fracture,

Vertebra_plana: vertebra has lost almost its entire height both anteriorly and posteriorly.

Chalk_stick fracture: most frequently in ankylosing spondylitis,

Limbus fracture: fracture of the apophyseal ring

மேற்கூறிய எந்த காரணத்தாலும் நடக்காததால் இந்த கண்டிசனுக்கு நான் சூட்டிய பெயர் , UP Rape fracture.

Due to continuous inhuman sexual act and immoral killing of a lowercaste girl by some upper caste rogues in India. இவர்களது உறுப்பு அறுபட்டு கொலை செய்திட வேண்டும் . மரு.சஃபி. நாகர்கோவில். பி.கு.! தாராளமாக #பகிரவும். உலகமே .பியை #உமிழட்டும் . நன்றி !! — at Red Pool Ground” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை DrSafi என்பவர் 2020 அக்டோபர் 4ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மிகக் கொடுரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா, இல்லையா என்று விவாதமே நடந்து வருகிறது.

அசல் பதிவைக் காண… Facebook I Archive

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் எக்ஸ்ரே படம் என்று ஒரு படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். நாம் எடுத்துக் கொண்ட ஆய்வில் பெண்ணின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், பல பதிவுகளில் பெயருடன் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.

உ.பி இளம் பெண்ணின் கழுத்து துப்பட்டாவால் நெறிக்கப்பட்டு முதுகெலும்பு உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், இந்த எக்ஸ்ரே படத்தில் இடுப்புக்கு மேல் உள்ள முதுகெலும்பு பகுதி உடைந்திருக்கிறது. எனவே, உண்மையில் இது ஹாத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் எக்ஸ்ரே படமா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மூளை நரம்பியல், முதுகெலும்பு தொடர்பான மருத்துவ இதழ்களில் இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண… amazon.com I Archive

இந்த புகைப்படத்தை 2019ம் ஆண்டு வெளியான “Chiroquacktic: The Dangers of Chiropractic Medicine Kindle Edition” என்ற புத்தகத்தின் அட்டைப் படமாக வைத்திருப்பதைக் காண முடிந்தது. 

2008ம் ஆண்டு ebaumsworld.com என்ற இணையதளத்தில் வேதனை மிகுந்த எக்ஸ்-ரேக்கள் என்ற தொகுப்பில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது நமக்குக் கிடைத்தது. அதன் பிறகு 2020ம் ஆண்டு வரை பல தளங்களில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே, 2020 அக்டோபர் மாதம் உயிரிழந்த ஹாத்ராஸ் இளம் பெண்ணின் எக்ஸ்ரே இது இல்லை என்பது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண… ebaumsworld.com I Archive 1 I ngentubrux.blogspot.com I Archive 2

நம்முடைய ஆய்வில்,

இந்த எக்ஸ்ரே படம் 2008ம் ஆண்டில் இருந்து ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது உறுதியாகி உள்ளது.

2019ம் ஆண்டு வெளியான மருத்துவ புத்தகம் ஒன்றில் அட்டைப் படமாக இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஹாத்ராஸ் இளம்பெண் அக்டோபர் 2020ல் உயிரிழந்தார்.

இதன் அடிப்படையில் பழைய எக்ஸ்ரே படத்தை எடுத்து வந்து உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை காரணமாக இறந்த பெண்ணின் எக்ஸ் ரே என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்து வந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், 2008ம் ஆண்டுக்கு முந்தைய படத்தை ஹாத்ராஸ் இளம் பெண்ணின் எக்ஸ் ரே என்று தவறாக பகிர்ந்து வருவவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உ.பி இளம் பெண்ணின் உடைந்த முதுகெலும்பு எக்ஸ்ரே இதுவா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply