இது கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு அல்ல; முழு விவரம் இதோ!

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu விளையாட்டு

‘’கிரிக்கெட் வீரர் நடராஜின் வீடு,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், நடராஜனின் வீடு என்று கூறி ஒரு குடிசையின் புகைப்படத்தை இணைத்து, தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim Link 1Archived Link 1

உண்மை அறிவோம்:
கிரிக்கெட் வீரர் நடராஜன் தற்போது இந்திய அளவில் பெரிதும் விவாதிக்கப்படும் நபராக மாறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்ற தேவையான பங்களிப்பை நடராஜன் தனது சாமர்த்தியமான பந்துவீச்சின் மூலம் வழங்கினார். இதற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், நடராஜனின் பின்னணி பற்றி பலரும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை பகிர்வதைக் காண முடிகிறது. சமூக வலைதளங்களில் அவரது ஏழ்மையான வீடு என்று கூறி மேற்கண்ட குடிசை ஒன்றின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையில், அது நடராஜனின் வீடு அல்ல; அவரது தாயார் நடத்தும் மாலை நேர சிற்றுண்டி கடை ஆகும்.

The Indian Express News Link

நடராஜனின் தாயார் நடத்தும், இறைச்சி வறுவல் கடைதான் இது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சன் நியூஸ் குறிப்பிட்ட இடத்திலேயே நேரடியாக பேட்டி எடுத்து ஒளிபரப்பிய வீடியோவை கீழே இணைத்துள்ளோம். 

இறுதியாக, நடராஜனின் வீடு வேறு ஒன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அது பற்றி ஊடகங்களிலும் செய்தி ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. அந்த லிங்கையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

நடராஜன் கஷ்டப்பட்டது உண்மைதான். பிறகு அதில் இருந்து முன்னேறி 2014ல் தமிழ்நாடு அணிக்காக, ரஞ்சி டிராபி தொடரில் இடம்பெற்று விளையாடியுள்ளார். பின்னர், டிஎன்பிஎல், ஐபிஎல் தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்காக, என அவரது பயணம் கடந்த 5 ஆண்டுகளில் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய பிறகே நடராஜனின் வாழ்க்கை முன்னேற்றம் கண்டது எனும் அர்த்தத்தில் பகிரப்படும் தகவல்கள் தவறானவை.

ஒருவர் வறுமையில் இருந்து போராடி வாழ்க்கையில் சாதனை படைத்தவர் என்பதற்காக, அவரை பாராட்டுவது போல பாராட்டி, மட்டம் தட்டும் வகையில் முன்னுக்குப் பின் முரணான பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்வதைச் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி நடராஜன் பற்றி சரியாக உண்மைத்தன்மை தெரியாமல் பகிரப்படும் புகைப்படம்தான் நாம் ஆய்வு செய்ததும்…

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் குழப்பமானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இது கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு அல்ல; முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False