‘’பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்திய திமுக அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, பலரும் இதனை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
2021 மே மாதம் வெளியான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில், திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, ஆட்சியமைத்துள்ளது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்திவிட்டதாக, திமுக பற்றி மேற்கண்ட செய்தியை சிலர் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் அப்படியான அறிவிப்பு எதையும் ஆட்சிக்கு வந்தது முதலாக, இதுநாள் (02.07.2021) வரையிலும் திமுக அரசு வெளியிடவில்லை.

Polimer News Link

ஆனால், தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் எனக் கூறிவிட்டு, பின்னர் அதற்கு வாய்ப்பில்லை என்று சமீபத்தில் திமுக அரசு குறிப்பிட்டிருந்தது. அந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், இதற்கும் நாம் ஆய்வு செய்யும் தகவலுக்கும் தொடர்பில்லை. அந்த தகவலை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டபோது, அதில், இந்தியா டுடே ஊடகத்தில் வெளியான செய்தியின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளதைக் கண்டோம். அந்த ஸ்கிரின்ஷாட்டில் உள்ள தலைப்பின் அடிப்படையில் தகவல் தேடினோம்.

இதன்படி, மேற்கண்ட செய்தி கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி (03.05.2020) அன்று வெளியானதாக விவரம் கிடைத்தது. அந்த காலக்கட்டத்தில் அதிமுக அரசே ஆட்சியில் இருந்தது. 2021 மே மாதத்தில்தான் திமுக ஆட்சிக்கு வந்தது.

India Today News Link I Archived Link

எனவே, 2020ம் ஆண்டில் வெளியான பழைய செய்தியை புதியது போல, தற்போது பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:2020ல் வெளியான செய்தியை திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி பகிர்வதால் குழப்பம்!

Fact Check By: Pankaj Iyer

Result: False