எப்ஸ்டீனுடன் நரேந்திர மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருந்த எப்ஸ்டீன் கோப்புகளில் எப்ஸ்டீனுடன் நரேந்திர மோடி இருப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் ஆவணத்தில் எப்ஸ்டீனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. 

நிலைத் தகவலில், “இன்னைக்கு இத சங்கி பயலுக #AI சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்னுமில்லை 😏 ஏன்னா தப்பிக்க ஒரே வழி அதுதானே 😌 

ஆனா பாருங்க Abdul Jaleel நம்ம அண்ணாத்தே ஆடியோ இந்த AI முசிபத்துக்கு முன்னாடியே வந்ததாலே 🤣 பொரடியில அடிச்சி வெளிய பத்திவிட்டாச்சி 🤭 இல்ல இன்னுக்கும் ம்ம்ம்ம்ம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

எப்ஸ்டீனுடன் நரேந்திர மோடி இருக்கும் புகைப்படத்தை பாஜக-வினர் தப்பிப்பதற்காக ஏஐ என்று சொல்வார்கள் என்ற அர்த்தத்தில் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதாவது, உண்மையான புகைப்படம் என்பது போலவும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்று கூறி பாஜக-வினர் தப்பிக்க முயற்சி செய்வார்கள் என்பது போலவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தில் மோடிக்கு பின்புறம் அலமாரி முழுக்க புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போலவும், எப்ஸ்டீன் பக்கம் மரங்கள் நிறைந்த திறந்த வெளியில் இருப்பது போலவும் உள்ளது. சரியாக எடிட் கூட செய்யத் தெரியாதவர்கள் இந்த புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டிருப்பது படத்தைப் பார்க்கும் போதே தெரிகிறது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருந்த எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வெளியாகி இருக்கவில்லை. மேலும், மோடியின் புகைப்படத்திற்கு பதில் ராகுல் காந்தியின் புகைப்படத்தை வைத்தும் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது. இதன் மூலம் காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சியினரும் ஒருவர் மற்றொருவர் புகைப்படத்தை வைத்து எடிட் செய்து வதந்தி பரப்பியிருப்பது தெரிய வந்தது.

இதைத் தவிர எந்த ஒரு நம்பத்தகுந்த, சர்வதேச, இந்திய ஊடகங்களிலிருந்து செய்தி, புகைப்படம் வௌியாகி இருக்கவில்லை. உண்மையான புகைப்படமாக இருந்திருந்தால் சர்வதேச ஊடகங்களிலாவது வௌியாகி இருந்திருக்கும். இவை எல்லாம் இந்த புகைப்படம் போலியானது என்பதை உறுதி செய்தன.

எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டுள்ள அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்திற்கு (https://www.justice.gov/epstein) சென்று இது தொடர்பாக தேடிப் பார்த்தோம். நரேந்திர மோடி பெயரை டைப் செய்து தேடிய போது 31 இடங்களில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை திறந்து பார்த்த போது அவரைப் பற்றி வெளியாகி இருந்த செய்திகள் அதில் இருந்தன. டீக்கடைக்காரர் எப்படி பிரதமர் ஆனார் என்பது போன்ற அந்த செய்திகளை பார்க்க முடிந்தது.

ராகுல் காந்தி என்று டைப் செய்து தேடிய போது, நான்கு இடங்களில் அவரது பெயர் இடம் பெற்றிருந்தது. அதில் மூன்று ராகுல் காந்தி தொடர்பான வெளியான செய்திகளாக இருந்தது. ஒன்று வேறு ஒரு ராகுல் காந்தியை பற்றிய குறிப்பாக இருந்தது. மற்றபடி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படத்தை அவற்றில் காண முடியவில்லை.

இதை மேலும் உறுதி செய்துகொள்ள ஏஐ புகைப்படங்களை கண்டறிய உதவும் இணையதளங்களில் இதை பதிவேற்றித் தேடினோம். அவையும் இந்த புகைப்படம் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. 94 சதவிகிதம் வரை டிஜிட்டல் முறையில் எடிட் செய்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிவித்தன. சில டூல்களில் இந்த சதவிகிதம் சற்று குறைவாக இருந்தாலும் பெரும்பாலான நம்பத்தகுந்த ஏஐ வீடியோ, புகைப்படங்களை கண்டறிய உதவும் தளங்கள் இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம்தான் என்று உறுதி செய்தன. 

தொடர்ந்து தேடிய போது நம்முடைய Fact Crescendo Tamil இலங்கை தமிழ் இணையதளத்திலும் இந்த புகைப்படம் தொடர்பாக கட்டுரை வெளியாகி இருந்ததை காண முடிந்தது. அதிலும் ஏஐ புகைப்படங்களை கண்டறிய உதவும் தளங்களின் உதவியுடன் இந்த புகைகப்படம் போலியானது என்று அவர்கள் உறுதி செய்திருந்தனர். அந்த கட்டுரையை காண இங்கே கிளிக் செய்யுங்கள். 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எப்ஸ்டீன் மற்றும் ஒரு பெண்ணுடன் பிரதமர் மோடி நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதாக பரவும் படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

FacebookI X PostI Google News ChannelI Instagram

Avatar

Title:எப்ஸ்டீனுடன் நரேந்திர மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply