‘ராகுல் ராஜிவ் பெரோஸ்’ என்ற பெயரை வெளிநாடுகளில் ராகுல் காந்தி பயன்படுத்துகிறாரா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’ ராகுல் ராஜிவ் பெரோஸ் என்ற பெயரை வெளிநாடுகளில் ராகுல் காந்தி பயன்படுத்துகிறார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Facebook Claim Link l Archived Link 

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த படத்தை உற்று பார்த்தாலே, அதில் உள்ள பெயர்ப்பலகை முரண்பாடாக இருப்பதைக் காணலாம். ஆம், இதில் உள்ளதைப் போன்று ‘’ Rahul Rajiv Feroz – Gold From potato expert wayanad Kerala,’’ என எங்கேயும் பெயர்ப்பலகை எழுத வாய்ப்பில்லை. 

இப்படத்தை நாம் கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இதன் உண்மையான படம் கிடைத்தது. 


Sam Pitroda Tweet Link 
இதில் எங்கேயும் ‘ராகுல் ராஜிவ் பெரோஸ்’ என்று எழுதப்படவில்லை. 

இதுபற்றிய மற்றொரு வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

மேலும் பல ஊடகங்களும் இந்த புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘ராகுல் ராஜிவ் பெரோஸ்’ என்ற பெயரை வெளிநாடுகளில் ராகுல் காந்தி பயன்படுத்துகிறாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: ALTERED