FactCheck: மொபைல் கோபுரம் நிறுவ அனுமதி வழங்கி டிராய் கடிதம்: உண்மை என்ன?
‘’மொபைல் கோபுரம் நிறுவ அனுமதி வழங்கிய டிராய்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் உண்மையா என ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த கடிதத்தை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
இதனை ஃபேஸ்புக்கிலும் பலர் உண்மையா, பொய்யா என்று தெரியாமல் குழப்பத்துடன் கடந்த சில ஆண்டாகவே ஷேர் செய்து வருவதை காண நேரிட்டது.
உண்மை அறிவோம்:
ஏர்டெல் நிறுவனம் மொபைல் கோபுரம் நிறுவுவதற்கு, அனுமதி வழங்கி, டிராய் (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) தடையில்லாச் சான்று வழங்கிய கடிதம்தான் மேலே நாம் கண்டது.
உண்மையில், டிராய் இப்படியான அனுமதி கடிதம் எதுவும் வழங்குவதில்லை. டிராய் பெயரில் கடந்த சில ஆண்டுகளாகவே, இத்தகைய வதந்திகள் பரவி வருகின்றன. அதற்கு, டிராய் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து, ஊடகச் செய்திகள், குறுஞ்செய்திகள் வாயிலாக பொதுமக்களை எச்சரித்து வருகிறது.
இது மட்டுமின்றி டிராய் பெயரில் பகிரப்படும் மொபைல் டவர் நிறுவும் மோசடி பற்றி விரிவான விளக்கம் அளித்து, பொதுமக்களுக்கான எச்சரிக்கை வீடியோ ஒன்றையும் டிராய் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
எனவே, டிராய் பெயரில் போலியான கடிதம், அறிக்கைகளை தயாரித்து சிலர் பொதுமக்களிடம் மோசடி செய்ய முயல்வதால், இதுபோன்ற தடையில்லாச் சான்றை காட்டி யாரேனும் உங்களை அணுகினால், எச்சரிக்கையாக செயல்படும்படி கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:மொபைல் கோபுரம் நிறுவ அனுமதி வழங்கி டிராய் கடிதம்: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Explainer