FactCheck: கொரோனா வைரஸ் என்பது வெறும் குளிர் காய்ச்சல் என்று உலக டாக்டர்கள் கூட்டமைப்பு கூறியதா?

இந்தியா கோவிட் 19 சமூகம்

‘’கொரோனா வைரஸ் என்பது வெறும் குளிர் காய்ச்சல் என்று உலக டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

குறிப்பிட்ட தகவல் மற்றும் அதனுடன் கூடிய வீடியோ ஒன்றை வாசகர்கள் சிலர், +91 9049053770 எனும் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர்.

இதில், ‘’ பிரேக்கிங் நியூஸ்: கொரோனா ஒரு பருவகால வைரஸ் என்று கூறி, யு-டர்ன் எடுப்பதை world doctors association  தனது தவறை முழுமையாக ஒப்புக்கொண்டது. சீசன் மாற்றத்தின் போது இது ஒரு குளிர் புண் தொண்டை. பீதி அடையத் தேவையில்லை. WHO இப்போது கூறுகிறது, கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை அல்லது பொதுமக்களுக்கு சமூக இடைவெளி தேவையில்லை. இது ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நபருக்கும் பரவுவதில்லை. WHO பத்திரிகையாளர் சந்திப்பைக் காண்க,’’ என்று எழுதியுள்ளனர்.

இதன் கீழே வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளனர். சுமார் 18 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், 2 பேர் பேசுகின்றனர். ஒருவர், ஹாலந்தை சேர்ந்த டாக்டர் எல்க் டி கிளெர்க் (Elke De Klerk) ஆவார். மற்றொருவர் அயர்லாந்தை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் டோலரஸ் கஹில் (Dolores Cahill) ஆவார். அவர்களின் பேச்சு சாராம்சம் முழுவதும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் தொற்று பற்றி பேசப்படும் தகவல்களை உண்மை போல சித்தரிப்பதாக உள்ளது.

இதே தகவலை ஃபேஸ்புக்கில் சிலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

Facebook Claim LinkArchived Link 

உண்மை அறிவோம்:
இதில் கூறப்படுவதைப் போல, முதலில், கொரோனா வைரஸ் என்பது சாதாரண குளிர் காய்ச்சல் மட்டும்தானா (ஃப்ளூ) என்று பார்த்தால், இல்லை என்பதே பதிலாகும். அதாவது, கொரோனா வைரஸ் என்பது இன்ஃப்ளூயன்சா (ஃப்ளூ) வகையை சேர்ந்தது அல்ல; அது SARS-CoV2 வகை வைரஸ் ஆகும். அதாவது, ஃப்ளூ காய்ச்சலை விட மிகவும் கொடியதாகும். எனவே, இதனை சாதாரண குளிர்காய்ச்சலுடன் ஒப்பிடுவது தவறு.

Coronovirus Vs The Flu

அடுத்தப்படியாக, PCR சோதனை முடிவுகள் பற்றி கூறப்படும் தகவலும் தவறாகும். முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

thelancet.com Link

இது தவிர, சீசனுக்கு வரும் ஃப்ளூ பாதித்து உயிரிழப்பவர்களை விடவும், கோவிட் 19 பாதித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

Death rate between Covid 19 and Flu

Centers for Disease Control and Prevention

இறுதியாக, நாம் ஆய்வு செய்யும் தகவலை பரப்பியதற்காக, மருத்துவ பேராசிரியர் Dolores Cahill-க்கு, அவர் பணிபுரியும் கல்வி நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Irishtimes link

இதுதவிர, ஐரோப்பிய யூனியன் மருத்துவக் குழுவில் இருந்து அவரை ராஜினாமா செய்யும்படி ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்தியும் உள்ளது.

Irishtimes Link 1 I Healthfeedback Link

கோவிட் 19 பற்றிய வதந்திகள், அதன் அடிப்படை விவரங்கள் பற்றி ஏற்கனவே WHO விரிவாக, தங்களது இணையதளத்தில் தகவல் பகிர்ந்திருக்கிறது.

WHO – Covid 19 Pandemic I WHO – Covid 19 Myths

எனவே, சமூக வலைதளங்களில் உரிய ஆதாரங்கள் இன்றி கொரோனா வைரஸ் பற்றி பகிரப்படும் தகவல் எதையும் உண்மை என்று நம்பாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:கொரோனா வைரஸ் என்பது வெறும் குளிர் காய்ச்சல் என்று உலக டாக்டர்கள் கூட்டமைப்பு கூறியதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False