
‘’மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற APPLE போன் நிறுவனரின் மனைவி 𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀 💐🚩🕉💫👌’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவில் இருக்கும் பெண் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி அல்ல என்றும், வேறொரு பெண் என்றும் தெரியவந்தது.
ஆம், ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி Laurene Powell Jobs மகா கும்பமேளாவில் பங்கேற்றது உண்மைதான். அவர் பற்றி ஊடகங்களில் வெளியான செய்தி மற்றும் வீடியோ வேறொன்றாகும்.
NDTV Link l Times of India l The Hindu l ANI
ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் இருக்கும் பெண்ணின் பெயர் Sadhvi Bhagawati Saraswati. இவரும் கும்பமேளாவில் பங்கேற்றுள்ளார் என்பது தனிக்கதை.
குறிப்பிட்ட வீடியோவிலேயே இவர் பெயர் வாட்டர் மார்க் செய்யப்பட்டுள்ளதை, தெளிவாகக் காண முடிகிறது.
இதுபோன்று ஏராளமான ரீல்ஸ் பதிவுகள், sadhviji என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
Laurene Powell Jobs புகைப்படத்தையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் இருக்கும் பெண்ணின் படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் இருக்கும் பெண் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Pankaj IyerResult: Misleading
