
‘’சீமான் அனுப்பிய பொங்கல் பரிசு ‘ரம் பாட்டில்’ என்று பதிவிட்ட கிஷோர் கே சுவாமி’’, என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ kishore k swamy… சீமான் அண்ணனிடமிருந்து வந்த பொங்கல் வாழ்த்தும் பரிசும் ❤️’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
இதன்படி, kishore k swamy வெளியிட்ட உண்மையான பதிவு வேறொன்றாக உள்ளது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இந்த பதிவை வேண்டுமென்றே எடிட் செய்து, சமூக வலைதளங்களில் சிலர் வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:சீமான் அனுப்பிய பொங்கல் பரிசு ‘ரம் பாட்டில்’ என்று கிஷோர் கே சுவாமி பதிவிட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: ALTERED
