FactCheck: ஓங்கோல் தெலுங்கர் என்று மு.க.ஸ்டாலின் பற்றி பிரகாஷ் ராஜ் கருத்து கூறினாரா?

இந்தியா கோவிட் 19 தமிழ்நாடு

‘’ஓங்கோல் தெலுங்கர் என்று மு.க.ஸ்டாலின் பற்றி பிரகாஷ் ராஜ் விமர்சனம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பரவும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.

இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வரும் சூழலில், கர்நாடகாவைச் சேர்ந்த அவர், தெலுங்கில் எப்படி போட்டி போடலாம் என்றும், அவரை தமிழ்நாடு அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Indian Express Link

இந்த சூழலில்தான், மேற்கண்ட தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. அதில், தெலுங்கரான ஸ்டாலின் எப்படி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டாரோ, அதேபோல போட்டியிடுகிறேன் என்று, பிரகாஷ் ராஜ் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி நாம் தந்தி டிவி ஆசிரியர்கள் குழுவில் விசாரித்தபோது, ‘’இப்படியான செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இதுகுறித்து ஏற்கனவே எங்களது சமூக வலைதள பக்கங்களின் வழியே விளக்கம் அளித்திருக்கிறோம்,’’ என்றனர்.

தந்தி டிவியின் மறுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link

எனவே, தந்தி டிவி பெயரில் பரவும் போலிச் செய்தி இது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஓங்கோல் தெலுங்கர் என்று மு.க.ஸ்டாலின் பற்றி பிரகாஷ் ராஜ் கருத்து கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •