FactCheck: நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை…

இந்தியா | India சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

‘’சமீபத்தில் வந்த பக்ரீத் பண்டிகையை ஒட்டி நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

உண்மை அறிவோம்:
நடிகர் சூர்யா முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக, நீண்ட நாளாகவே சமூக வலைதளங்களில் வதந்தி பகிரப்பட்டு வருவது வழக்கம்.

Fact Crescendo Tamil Link 1 

Fact Crescendo Tamil Link 2

இந்த நிலையில், மீண்டும் இதே வதந்தியை மற்றொரு புதிய படம் சேர்த்து, பகிர தொடங்கியுள்ளனர். குறிப்பிட்ட புகைப்படம், நடிகர் சூர்யா, கடந்த 2019ம் ஆண்டில் அஜ்மீர் தர்கா சென்று வழிபட்டபோது எடுக்கப்பட்டதாகும்.

India Today Link I Archived Link

இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் அப்போதே செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவுடன், இயக்குனர் சுதா கொங்காரா உள்ளிட்டோர் அப்போது சென்றிருந்ததாக, புகைப்படங்களும், செய்திகளும் காணக் கிடைத்தன.

Dinamalar Link I Vikatan Link I Asianet Tamil Link

எனவே, பழைய செய்தியை எடுத்து, புதியதுபோல மீண்டும் வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.  

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer 

Result: False