நடிகர் சூர்யா மதம் மாறினாரா?- தவறான செய்தி தலைப்பால் சர்ச்சை

சமூக ஊடகம் சினிமா

‘’நடிகர் சூர்யா மதம் மாறியது உண்மைதான்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link 
Tamizhakam.com LinkArchived Link 

இந்த ஃபேஸ்புக் பதிவில், Tamizhakam என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நடிகர் சூர்யா, அவரது சகோதரர் கார்த்தி மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா போன்றோர் சமூக நடப்புகள் பற்றி ஏதேனும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது வழக்கமாகும். இதனால், அவர்கள் இந்து மதத்தினர் இல்லை; காசுக்காக வேறு மதத்திற்கு மாறிவிட்டனர், என்று கூறி சிலர் அவர்கள் மீது தவறான தகவல் பரப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற வதந்தி பரவிய நிலையில், நாம் அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

Fact Crescendo Tamil Link 1Fact Crescendo Tamil Link 2Fact Crescendo Tamil Link 3

இதுபோலவே, மேற்கண்ட இணையதள செய்தியிலும் தவறான தகவல் ஒன்று இடம்பெற்றுள்ளது. செய்தியின் தலைப்பில், ‘’ஆம், சூர்யா மதம் மாறியது உண்மை தான்..? – காட்டிக்கொடுத்த கூகுள் – சூர்யாவின் தற்போதைய பெயர் – ரசிகர்கள் அதிர்ச்சி..!’’ எனக் கூறியுள்ளனர்.

இதனைப் பார்த்ததும், சூர்யா பற்றி தவறான எண்ணம் உருவாக, உடனடியாக கிளிக் செய்து, படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. 

நாமும் இதே போல கிளிக் செய்து, முழு செய்தியை படித்துப் பார்த்தோம். உள்ளே, வேறு ஒரு தகவல் இடம்பெற்றுள்ளது. ஆம், ‘’நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் பற்றி கூகுளில் ‘சூர்யாவின் நிஜப் பெயர் சூரையா ஜமால் சேக்‘ என்று காட்டுவதால், பலரும் குழப்பமடைந்துள்ளனர். இது சூர்யாவை பிடிக்காதவர்களின் வேலையாக இருக்கும் என சூர்யா ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். சூர்யா மதம் மாறியதைப் போல, இதனைப் பார்க்கும்போது உள்ளது,’’ என்று செய்தியின் உள்ளே எழுதப்பட்டுள்ளது.  

உண்மை இப்படியிருக்க, ‘’சூர்யா மதம் மாறியது உண்மைதான், காட்டிக்கொடுத்த கூகுள்’’ என எதற்காக, இந்த செய்திக்கு தலைப்பிட்டுள்ளனர் என்று தெரியவில்லை.

மேலும், இவர்கள் கூறுவது போல, கூகுளில் சூர்யாவின் உண்மைப் பெயர் என்னவென்று விவரம் தேடியபோது, சரவணன் சிவக்குமார் என்றே விவரம் கிடைத்தது. 

ஒருவேளை, இதற்கு முன் யாரேனும் கூகுளில் இப்படி சில்மிஷம் செய்திருக்கலாம் அல்லது கூகுள் தகவலை எடிட் செய்து தவறான தகவலை பரப்பியிருக்கலாம் என தெரியவருகிறது. எனினும், தற்போது சூர்யாவின் பெயரில் எந்த தவறும் கூகுளில் காட்டவில்லை.

எனவே, ‘சூர்யா மதம் மாறியது உண்மைதான், காட்டிக் கொடுத்த கூகுள்,’ என தலைப்பில் கூறிவிட்டு செய்தியின் உள்ளே வேறு விதமாக தகவல் கூறியுள்ளதைப் பார்க்கும்போது, இது பரபரப்பிற்காக வெளியிடப்பட்ட செய்தி என தெரியவருகிறது.

உண்மை இப்படியிருக்க, இந்த செய்தியை பலர் மேலோட்டமாகப் படித்துவிட்டு உண்மை என நம்பி மிக ஆக்ரோஷமாக அரசியல் விமர்சனம் செய்து வருகின்றனர். அத்துடன் சிலர், உண்மையாக இருந்தாலும் என்ன, அவர் எந்த மதத்தவராக இருந்தாலும் நல்லவர் என்றும் கூறி ஆதரவாகவும் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டு வரும் கமெண்ட்களில் சிலவற்றை ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம். 

‘’இவர் செய்யும் பயங்கர காரியத்தைப் பாருங்கள், இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா?’’ என்றெல்லாம் வாசகர்களை ஈர்ப்பதற்காக, கவர்ச்சியான தலைப்புகளில் செய்தி வெளியிடுவதை வழக்கமாகச் சிலர் கொண்டுள்ளனர். அப்படி லைக் வாங்குவதற்காக தவறான தலைப்பைச் சேர்த்து பகிரப்பட்ட செய்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியும்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:நடிகர் சூர்யா மதம் மாறினாரா?- தவறான செய்தி தலைப்பால் சர்ச்சை

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •