உலகின் 5வது மிகப்பெரிய வைரம் தமன்னா கையில் உள்ளதா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’உலகின் 5வது மிகப்பெரிய வைரம் தமன்னா கையில் உள்ள மோதிரம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Claim Link l Archived Link l Vikatan News Link 

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

இந்த செய்தியின் தலைப்பு மற்றும் உள்ளேயும் ‘’தமன்னா அணிந்துள்ளது உலகின் 5வது பெரிய வைரமாகும். அந்த மோதிரத்தின் மதிப்பு ரூ.2 கோடி. அவரின் காதலன் மோதிரத்தை வாங்கிக்கொடுக்கவில்லை. தமன்னாவும் வாங்கவில்லை. நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா, இந்த அளவுக்கு விலையுயர்ந்த பரிசை தமன்னாவிற்கு கொடுத்துள்ளார். 2019-ம் ஆண்டே இந்தப் பரிசு தமன்னாவிற்குக் கிடைத்துவிட்டது. அதனை தமன்னா அணியும் புகைப்படம் ஒன்றை உபாசனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். 

ஆனால், மேற்கண்ட செய்தியில் கூறியுள்ள விவரம் உண்மையானதல்ல. தமன்னா அணிந்துள்ளது வைர மோதிரமும் அல்ல; அது ஒரு பாட்டில் ஓபனர் ஆகும். இதனை தமன்னாவே தெரிவித்துள்ளார். 

உபசனா 2019ம் ஆண்டு இந்த படத்தை முதலில் ட்விட்டரில் வெளியிட்டார்.  உண்மை தெரியாமல், இதே படத்தை மீண்டும் புதியதுபோல சிலர் தற்போது பகிர்ந்து சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

ஆனால், 2019ம் ஆண்டே இதற்கு தமன்னா பதில் அளித்துவிட்டார். அது புரியாமல் மீண்டும் மீண்டும் இந்த புகைப்படத்தை சிலர் பகிர்ந்து, இது வைரம் என வதந்தி பரப்புகிறார்கள் என்று தெளிவாகிறது.

இதுபற்றிய செய்தி ஆதாரம் இதோ…

Indianexpress News Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தை வைத்து புதியதுபோல விகடன் ஊடகம் செய்தி வெளியிட்டு, வாசகர்களை குழப்பியுள்ளது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:உலகின் 5வது மிகப்பெரிய வைரம் தமன்னா கையில் உள்ளதா?

Written By: Fact Crescendo Team 

Result: False