
‘‘விஜய்தான் முதல்வர்,’’ என்று நடிகர் பார்த்திபன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ விஜய்தான் முதல்வர். சமீபத்தில் தூத்துக்குடிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து வியந்து போய் விட்டேன். விஜய்யை பார்க்க வேண்டும் என்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலையுடன் வந்து நின்றார்கள். தேர்தலுக்கு முன்பே விஜய்யை ஒரு முதலமைச்சராக மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்- நடிகர் பார்த்திபன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தவறான தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்தி, என்று தெரியவந்தது.

இதன்படி, justbefilmy என்ற ஊடகம் போதிய ஆதாரம் இன்றி மேற்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது. பின்னர் பார்த்திபன் இதுபற்றி விளக்கம் கேட்ட நிலையில் அந்த செய்தியை justbefilmy ஊடகம், சமூக வலைதளத்தில் இருந்து, அகற்றியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊடகம் இந்த தவறான செய்திக்கு வருத்தம் தெரிவித்த பிறகும், உண்மை தெரியாமல், பலரும் இதனை ஷேர் செய்வது தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ்கார்டு தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram


