FactCheck: ஜக்கி வாசுதேவை கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்?- எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தால் சர்ச்சை…

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’காடு எங்கடா ஜக்கி,’’ என்று கேள்வி கேட்ட வானதி சீனிவாசன் எனக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை போல ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் உண்மையில் எடிட் செய்யப்பட்டு, பகிரப்படுவதாகும். இதன் உண்மையான புகைப்படத்தை வானதி சீனிவாசன் அவரது ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்துள்ளார்.

இதன்படி, கோவையில் ஈஷா ஃபவுண்டேஷன் சார்பாக நிறுவப்பட்டுள்ள ஆதி யோகி சிலை முன்பாக நின்று, இந்திய அளவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக, பிரதமர் மோடிக்கு பாஜக.,வினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையே மேற்கண்ட வகையில் எடிட் செய்து, சிலர் தவறாக பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஜக்கி வாசுதேவை கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்?- எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered