
பிரதமர் பதவிக்கு மோடியை விட அமித் ஷா திறமையானவர் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். குறிப்பிட்ட நியூஸ் கார்டை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து வருகின்றனர். சிலர் போலியான செய்தி என்று தெரிந்தாலும், அதனை அகற்றாமல் அப்படியே பரப்புகின்றனர்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பற்றி நாள்தோறும் புதுப்புது தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவற்றில் பலவும் வதந்தியாகவே உள்ளன. அவை பற்றி நாமும் அவ்வப்போது ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.
இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்தியே மேற்கண்ட நியூஸ் கார்டும். இதுபற்றி நாம் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘’எங்களது லோகோவை பயன்படுத்தி வேண்டுமென்றே சிலர் இத்தகைய போலியான செய்தி தயாரித்து பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையானதல்ல,’’ என்றனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:மோடியை விட அமித் ஷா திறமையானவர் என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
