குடியரசு தின அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை; தமிழ்நாடு அரசை கி.வீரமணி கண்டித்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

குடியரசு தின அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை வைக்கப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் விவரம் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இந்த செய்தியை பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் நடைபெறும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு அரசு சார்பாக அனுப்பப்பட்ட வாகன வரைபடத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதுபற்றி பலரும் விமர்சித்து வரும் சூழலில், இதற்காக அனுப்பப்பட்ட அதே அலங்கார ஊர்தியை வடிவமைத்து, தமிழ்நாடு அரசு சார்பாக, சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி, இந்த வாகனம் இன்று (ஜனவரி 26, 2022) நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் வலம்வந்தது. அதேபோல, மேலும் சில அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றிருந்தன. அதில், ஒரு அலங்கார ஊர்தியின் முன்புறத்தில் பெரியார் சிலை இருந்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் ஒரு சேர எழுந்துள்ளது.

Vikatan News Link I Hindu Tamil Link I News 18 Tamil Link

இவ்வாறு பெரியார் சிலையை வைத்து குடியரசு தின ஊர்வலம் நடத்தியதற்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளதாக, மேற்கண்ட செய்தியை பகிர்ந்துள்ளனர்.

ஆனால், ‘’இது தந்தி டிவி பெயரில் பகிரப்படும் போலியான செய்தி,’’ என்று, அந்த டிவியின் ஆசிரியர் குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:குடியரசு தின அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை; தமிழ்நாடு அரசை கி.வீரமணி கண்டித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False