‘’பணத்திற்கு ஆசைப்படும் சில பெண்களைக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஜோடித்ததே பொள்ளாச்சி வழக்கு – எடப்பாடி பழனிசாமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link
Facebook Claim Link 1Archived Link 1

நியூஸ் ஜே ஊடகத்தின் லோகோவுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’கண்ணீர் மல்க முதலமைச்சர் பேச்சு – அதிமுகவினர் அம்மாவின் வளர்ப்பு. பணத்திற்கு ஆசைப்படும் சில பெண்களைக் கொண்டு எதிர்கட்சிகளால் ஜோடிக்கபட்டதுதான் பொள்ளாச்சி வழக்கு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனை பதிவிட்ட நபர் டெலிட் செய்துவிட்டாலும், பலரும் உண்மை என்றே நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot: Various FB posts with similar caption

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ்கார்டை ஒருமுறை உற்று கவனித்தால் அதில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் ஃபாண்ட் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட ஒரு போலிச் செய்திதான் இது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், இதனை பலரும் உணராமல் அப்படியே ஷேர் செய்து வருகின்றனர்.

இதுபற்றி நியூஸ் ஜே ஊடகம் தரப்பில் விசாரித்தபோது, ‘’இது போலியான நியூஸ் கார்டு. உண்மையில் நாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டு வேறு ஒன்றாகும்,’’ என்றனர். அவர்கள் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, எடப்பாடி பழனிசாமி பற்றி வெளியான உண்மையான செய்தியை எடிட் செய்து, தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:எதிர்க்கட்சிகள் ஜோடித்ததே பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்று எடப்பாடி பழனிசாமி பேசவில்லை!

Fact Check By: Pankaj Iyer

Result: Altered