சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் அராஜகம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் அராஜகம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சேலம் அரசு மருத்துவமனையில் #காவலராக பணி அமர்த்தப்பட்ட ரவுடியின் #அராஜகம்! காதில் கேட்க கூடாத வார்த்தைகள் இவனை வேலையை விட்டு தூக்கும் வரை பரப்புங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்டு சீமான் மிரட்டியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கார்த்திக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன் செய்து திரள் நிதி கேட்பது போன்றும், சீமான் ஒரு சீட்டிங் ஆசாமி என்று நடிகர் கார்த்தியின் மனசாட்சி கூறுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

பட்ஜெட் தாக்கல் செய்தபோது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்றம் வந்தாரா?

‘’பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்றம் வந்தார்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பட்ஜெட் தயாரிப்புக்கும் இந்திய தேர்தல் கமிஷனருக்கும் என்ன சம்பந்தம்?  இவனுக்கு அங்க என்ன வேலை.???🤔🤧 நடுவில் ஏன் வந்தார்? தேர்தல் கமிசனர் அடுத்த நிதி அமைச்சரா?,’’ […]

Continue Reading

சேலம் எம்.பி திமுகவில் இருந்து விலகலா?

சேலம் தி.மு.க எம்.பி அக்கட்சியில் இருந்து விலகினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எக்ஸ் தளத்தில் யாரோ வெளியிட்டிருந்த விலகல் அறிவிப்பு ஒன்றுடன் கூடிய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “சேலம் MP திமுகவில் இருந்து விலகல்.. பேரனுக்கு பேனர் வைக்கவும் போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் […]

Continue Reading

இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்தாரா?

‘’இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது’’, என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது இந்துக்கள் அசைவ உணவு உண்பதால்தான் திருப்பரங்குறத்தில் ஆடு பலியிடுவதை எந்த தாக்கமும் இல்லாமல் கடந்துபோகிறோம் இனி இந்துக்கள் அசைவ உணவு உண்பதையே மத்திய அரசு தடை செய்ய […]

Continue Reading

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாரா?

‘’நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்’’, என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நாதகவை தடை செய்ய கோரிக்கைகலவரத்தை தூண்டும் வகையில் சீமான் செயல்படுவதால், நாதக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். –  திமுக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஸ்டாலின் மனு! […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் நடக்கும் ரேஷன் கடை முறைகேடு என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி விற்பனையில் முறைகேடு நடக்கிறது என்று ஒரு வீடியோவை அதிமுக-வினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive ரேஷன் கடையில் அரிசியை எடை போடும் போது எடைக் கல்லை வைத்து ரேஷன் கடை ஊழியர் முறைகேடு செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுகமாடல் ரேஷன் கடை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

நாதக-வில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகல் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

நாதக-வில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகியதாக ஒரு நியூஸ் கார்டை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விலகல். நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு. வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் சீமான் துரோகம் செய்து வருவதாக அவர் அறிக்கை” […]

Continue Reading

‘சீமானுக்கு முதல்வர் வேண்டுகோள்’ என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’கலைஞரை கூட விமர்சியுங்கள் தயவு செய்து தந்தை பெரியாரை விமர்சிக்க வேண்டாம்’’, என்று சீமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சீமானுக்கு முதல்வர் வேண்டுகோள்! கலைஞரை கூட விமர்சியுங்கள் தயவு செய்து தந்தை பெரியாரை விமர்சிக்க வேண்டாம் சீமானுக்கு முதல்வர் […]

Continue Reading

ஆபத்தான அரசியல் பேசும் சீமான் என்று வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்தாரா?

‘’ஆபத்தான அரசியல் பேசும் சீமான்’’, என்று இயக்குனர் வெற்றிமாறன் கடும் கண்டனம் தெரிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சீமான் ஆபத்தான அரசியல் பேசுகிறார்! தந்தை பெரியாருக்கு எதிராக சீமான் அவதூறு பரப்புவது மிகவும் மோசனமாது; அவரின் போக்கு கவலையும் அதிர்ச்சியும் தருவதாக உள்ளது; ஆபத்தான அரசியல் […]

Continue Reading

ஈரோட்டில் திமுகவினரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ ஈரோட்டில் திமுகவினரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த பொதுமக்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஈரோட்டில் செருப்படி வாங்கிய திமுக.. ஆட்சியில் இருந்து திருடுவதை தவிர வேறு எந்த வேலையும் செய்யாத திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்.. #ErodeEastByElection #DMKFailsTN,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

‘நான் முதல்வரானால் எச். ராஜாவுக்கு முக்கிய பதவி’ என்று சீமான் கூறினாரா?

‘’நான் முதல்வரானால் அப்பா எச் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்து அழகு பார்ப்பேன்’’, என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நான் முதல்வரானால் எச். ராஜாவுக்கு முக்கிய பதவி! பெரியாரின் சூழ்ச்சியால் தான் எச் ராஜா போன்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக முடியவில்லை! நான் […]

Continue Reading

‘விடுதலைக்காகப் போராடியது ஆர்.எஸ்.எஸ்’ என்று சீமான் கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

விடுதலைக்காகப் போராடிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான், சாவர்க்கர் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்! இந்தியாவின் விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆனால், சுதந்திர தினத்தை கருப்பு […]

Continue Reading

சாவர்க்கரை இழிவுபடுத்தி பெரியாரை தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா என்று சீமான் கேட்டாரா?

‘’சாவர்க்கரை இழிவுபடுத்தி பெரியாரை தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா?’’, என்று சீமான் கேட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெரியாரை அம்பலப்படுத்த வேண்டாமா? தேசத்துக்காக சிறை சென்ற  சாவர்க்கரை இழிவுபடுத்தி சுதந்திரத்தைக் கறுப்புதினம் என்ற பெரியாரைத் தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் […]

Continue Reading

கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் பிரகாஷ் ராஜ் நதியில் நீராடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கர்த்தரே..இவனை எதுக்கு கும்ப மெளாவுக்கு அனுப்பி வச்ச நீ எங்கய்யா..இங்க?” என்று இருந்தது. நிலைத் […]

Continue Reading

சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறினாரா?

‘’சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை’’, என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ்’ மறுப்பு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை! பிரபாகரன் – சீமான் சந்திப்பு குறித்து நியூஸ் 18-க்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கொடுத்த நேர்காணலைத் தொடர்ந்து, அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நாம் […]

Continue Reading

‘தி ராக்’ டுவைன் ஜான்சன் உள்ளிட்டோர் கும்பமேளாவில் பங்கேற்றனரா?

ஹாலிவுட் நடிகரும் WWE பிரபலமுமான தி ராக் டுவைன் ஜான்சன் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போலவும், அவர்களிடம் சனாதனம் குறித்து பேச பெரியாரிய ஆதரவாளர்களுக்குத் தைரியம் உள்ளதா என்று கேட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive WWE, ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் காவி உடை அணிந்து, கையில் ஜெய் ஶ்ரீராம் கொடியுடன் கும்பமேளாவில் பங்கேற்றது போன்று […]

Continue Reading

கும்பமேளா தீ விபத்து; சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கும்பமேளா தீ விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கைகளில் கயிற்றைக் கட்டி, துப்பாக்கி முனையில் ஆற்றிலிருந்து அழைத்து வருவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த சாமியார் “அயூப் கான்”. லட்சக்கணக்கான […]

Continue Reading

மோடியின் ராஜதந்திரத்தால் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்தியர் தேர்வு என்ற தகவல் உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரம் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவு இடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*பிரேக்கிங் நியூஸ்* சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்தல். இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி. பிரதமர் மோடியின் சாணக்கிய […]

Continue Reading

ஈவெராவை செருப்பால் அடித்த மே 17 இயக்கத்தினர் மற்றும் பெரியாரிஸ்ட்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ஈவெராவை செருப்பால் அடித்த மே 17 இயக்கத்தினர் மற்றும் பெரியாரிஸ்ட்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஈவேரா வை செருப்பால் அடித்த மே 17 இயக்க போராட்ட வாதிகள் மற்றும் பெறியாரிஸ்ட்கள். என்னையா #Thirumurugan_Gandhi குடிபோதையில் நடந்த போராட்டமா ?’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சலூன் கடை முற்றுகை. பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமானை கண்டித்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர். சீமான் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி முழக்கமிட்டு […]

Continue Reading

மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற APPLE போன் நிறுவனரின் மனைவி 𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀 💐🚩🕉💫👌’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1  l Claim Link 2   பலரும் இதனை உண்மை […]

Continue Reading

கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில சினிமா பிரபலங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டுத் திராவிட நடிகர்களைப் போல இல்லாமல் கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில திரைப்பட நடிகர்கள் என்று சில புகைப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு, இந்தி நடிகர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போன்ற ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தர பிரதேஷ் மாநிலம் பிராயக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மற்ற மாநிலங்களில் உள்ள சினிமா […]

Continue Reading

‘மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி’ என்று சீமான் கூறினாரா?

மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வடிவிலான வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வடிவிலான சீமான் பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி! கோமியம் விவகாரம் தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்” என்று இருந்தது. […]

Continue Reading

பிரபாகரன் படம் விவகாரம்: பல்டியடித்தாரா சங்ககிரி ராஜ்குமார்?

பிரபாகரன் – சீமான் புகைப்பட விவகாரம் தொடர்பாக சங்ககிரி ராஜ்குமார் பல்டியடித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அளித்த 19 விநாடி பேட்டி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அந்தப் புகைப்படம் உண்மைதான் ஒரே நாளில் பல்டியடித்த இயக்குநர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இந்தப் […]

Continue Reading

எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினாரா விஜய்?

‘’எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எடிட் னு நினச்சேன் உண்மையாவே பண்ணிருக்கான்  ஆகப்பெரும் அரசியல் தற்குறி யா இருக்காரே அண்ணா 😭.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link     பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

பெண்ணுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய இன்பநிதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இளம் பெண் ஒருவர் இன்பநிதி (உதயநிதியின் மகன் இன்பநிதியைப் போன்று தோற்றம் அளிக்கும் நபர்) மற்றும் இன்னொருவருக்கு முத்தம் அளித்தார் என்று சமத்துவ பொங்கல் கொண்டாடி இன்பநிதி என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு இளைஞர்களுக்கு இளம் பெண் ஒருவர் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு இளைஞர் பார்க்க […]

Continue Reading

ஹிந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஹிந்து இளைஞர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ஹிந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஹிந்து இளைஞர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த மண்ணின் அசல் வித்துக்களான எம் ஹிந்து சொந்தங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு… 👇 வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி ஹிந்து பெண்களை அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஒரு […]

Continue Reading

அதிமுக.,வில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டாரா?

‘’காயத்ரி ரகுராம் அதிமுக.,வில் இருந்து அதிரடி நீக்கம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு..கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் […]

Continue Reading

சூரியன் போட்டோவுக்கு மாலையிட்டு, பொங்கல் கொண்டாடிய விஜய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’பொங்கல் பண்டிகையை கொண்டாட சூரியனையும் பனையூருக்கு வரவழைச்ச தவெக தலைவர் விசய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பொங்கல் பண்டிகையை கொண்டாட சூரியனையும் #பனையூருக்கு வரவழைச்ச தவெக தலைவர் #விசய்…!’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

சீமான் அனுப்பிய பொங்கல் பரிசு ‘ரம் பாட்டில்’ என்று கிஷோர் கே சுவாமி பதிவிட்டாரா?

‘’சீமான் அனுப்பிய பொங்கல் பரிசு ‘ரம் பாட்டில்’ என்று பதிவிட்ட கிஷோர் கே சுவாமி’’, என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ kishore k swamy… சீமான் அண்ணனிடமிருந்து வந்த பொங்கல் வாழ்த்தும் பரிசும் ❤️’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 […]

Continue Reading

ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதா? 

‘’ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 பலரும் […]

Continue Reading

தமிழ்நாடு அரசு மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்ய கேட்டது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினாரா?

மதுரை – தூத்துக்குடி இடையே புதிய அகலப்பாதை அமைக்கும் பணியைக் கைவிடும்படி தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாகத் தகவல் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய நிலையில், அந்த தகவல் தவறானது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவே விளக்கம் அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ஐசிஎஃப்-ல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது சென்னை – தூத்துக்குடி புதிய […]

Continue Reading

ஓட விட்டுருவோம் என்று இன்ஸ்பெக்டரை மிரட்டினாரா காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்?

‘’ஓட விட்டுருவோம் என இன்ஸ்பெக்டரை மிரட்டிய காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காஞ்சிபுரம் #திமுக_MLA எழிலரசன் இன்ஸ்பெக்டரை பார்த்து போ நீ, போ நீ அதற்கு போலீஸ் அதிகாரி நான் போறேன் வார்த்தையை விடாதீங்கன்னு சொன்னவுடன்..ஓட விட்டுறுவோம்,தேவிடியா பசங்களா..கலெக்டர்,எஸ்பி […]

Continue Reading

சீமான் பேச்சுக்கு சமுத்திரக்கனி கண்டனம் தெரிவித்தாரா?

‘’சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்’’, என்று இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்! சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமைக்காக போராடிய தந்தை பெரியாரைப் பற்றி அவதூறு பரப்புவது மிக மோசமானது. சீமான் செய்வது அயோக்கியத்தன அரசியல் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அரசியல். […]

Continue Reading

“மோடி அரசை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி” என்று பரவும் வீடியோ உண்மையா?

நரேந்திர மோடி அரசு போக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே பேசிவிட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*பிஜேபி- ஐ ஆதரிக்கும் கூட்டங்களே நல்லா கேளுங்க!*சொல்வது உச்ச நீதிமன்ற நீதிபதி…* நீதித்துறை, தேர்தல் கமிசன்/ அமலாக்கபிரிவு/சிபிஐ போன்றவை மூலம்/ ஜெயிக்காத கட்சியை ஆளவைத்து […]

Continue Reading

பெரியார் பற்றித் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பெரியார் பற்றி சீமான் கூறிய கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அது பற்றி எனக்குத் தெரியாது, ஆய்வு செய்தால்தான் உண்மையா பொய்யா என்பது தெரியவரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு வீடியோ நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த வீடியோவை வைத்து நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்த நியூஸ் […]

Continue Reading

ஆளுநர் தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை. ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஆளுநர் உரையையும் புறக்கணித்தது அவர் தனிப்பட்ட விருப்பம் அதில் தவறு ஒன்றும் இல்லை – […]

Continue Reading

தேசிய கீதம் பாட முடியாமல் திணறிய சங் பரிவார் நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?

சங்கிகளுக்கு தேசப்பற்று இல்லை, தேசிய கீதம் கூட பாடத் தெரியாமல் திணறுகின்றனர் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவி நிற மேல் ஆடை அணிந்த ஒருவர் கொடியை ஏற்றிவிட்டு தேசிய கீதத்தைத் தப்புத் தப்பாகப் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் “தேசப்பற்று சங்கிகள்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சங்கி: உங்களுக்கு தேசபற்றே இல்ல தேசியகீதம் […]

Continue Reading

“மோடியை தொடுங்க” என்று கிறிஸ்தவ போதகர் ஜெபம் செய்ததை “கொல்லுங்க” என்று மாற்றி பரப்பிய விஷமிகள்!

மோடி, அமித்ஷா, மு.க.ஸ்டாலினை கொல்ல வேண்டும், அயோத்தியில் ராமர் கோவிலை இடிக்க வேண்டும் இயேசுவே என்று கிறிஸ்தவ மத போதகர் பிரார்த்தனை செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் ஜெபம் செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமரைக் கொல்லுங்க.. அமித்சாவைக் கொல்லுங்க… நிர்மலா சீத்தாராமனைக் கொல்லுங்க .. […]

Continue Reading

மன்மோகன் சிங்கை அவமதித்த சோனியா காந்தி என்று பரவும் வீடியோ உண்மையா?

மன்மோகன் சிங்கை கண்டுகொள்ளாமல் சோனியா காந்தி கடந்து சென்றது போன்ற வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பின்னணி தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Archive மன்மோகன் சிங் மற்றும் சில தலைவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது காரில் இருந்து இறங்கி நடந்து வரும் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை கடந்து செல்கிறார். சோனியா காந்தியை பார்த்தபடி மன்மோகன் சிங் திரும்ப, சோனியா […]

Continue Reading

புல்டோசரில் நின்று பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசரில் நின்று பிரசாரம் செய்தார் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று தோற்றம் அளிக்கும் நபர் புல்டோசரின் பக்கெட் பகுதியில் நின்று பிரசாரம் செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோகி புல்டவுசரால் ரவுடிகளின் வீட்டை இடிப்பது தவறு -அதுகது யோகி: சின்ராசு எடுடா […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் கடைசி படம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மன்மோகன் சிங் சிகிச்சை பெற்ற போது கடைசியாக எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை வைத்து நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மன்மோகன் சிங்கின் கடைசி புகைப்படம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று இம்மண்ணை விட்டு பிரிந்த நிலையில் […]

Continue Reading

அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பனையூர் :அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், […]

Continue Reading

பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

‘’பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம்,’’ என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் – அண்ணாமலை. இன்று என் சாட்டையடி போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னைப் பின்பற்றி, பாஜகவின் உண்மைத் தொண்டர்களும் இனி […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்திரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரபிரதேசத்தில் அப்துல் என்பவன் அவளியாக வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் சீண்டி வந்தவனை பொறிவைத்து பிடித்தது உ.பி போலீஸ்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

‘அண்ணாமலை ஒழிக’ என்று தமிழிசை கோஷமிட்டாரா?

‘’அண்ணாமலை ஒழிக என்று கூச்சலிடும் முன்னாள் பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணாமலை ஒழிக என்று கூச்சலிடும் முன்னாள் பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   இதனை பலரும் […]

Continue Reading

இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்ட டாய்லெட் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்ட டாய்லெட்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஒரு  இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்டதுGuess who is he,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

போன் பேசிக்கொண்டே கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறும் பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’போன் பேசிக்கொண்டே கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறும் பெண்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இது ரீல்ஸ் இல்ல..போனை பேசிக்கொண்டேகட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறிப் போய் இருக்கு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் பங்க் […]

Continue Reading

காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தியதால் நாட்டைவிட்டு ஓடினேன் என்று நீரவ் மோடி கூறினாரா?

நாட்டைவிட்டு ஓடும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்னை வற்புறுத்தியதால்தான் இந்தியாவை விட்டு வெளியேறினேன் என்று நீரவ் மோடி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீரவ் மோடி வாக்குமூலம் என்று ஆங்கிலத்தில் வெளியான பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “நானாக சுயமாக இந்தியாவை விட்டு தப்பித்து ஓட வில்லை. பாஜக ஆட்சிக்கு […]

Continue Reading