
‘’ஐந்தாண்டு திமுக ஆட்சியில் தமிழக சாலைகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஐந்தாண்டு திமுக ஆட்சி தமிழக சாலைகள் சாதனை படைத்தது..
#திருட்டு முன்னேற்றகழகம் #dmk #தமிழகவெற்றிக்கழகம் #comedy #trolls #viralreels #Funny #viralvideos #tamilcinema #tamilmemes #thalapathyvijay #tvk #vijay #tvkvirtualwarriors #vijay #instadaily #thalapathy #reelstamil #trendingreels #India #vibes #actorvijay #tvkvijayhq #vijayfans #tvkvettripadai #tvkfamily #instagood #amazing,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதில், ஏராளமான புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதில் உள்ள புகைப்படங்களில் ஒன்றை தவிர மற்ற மூன்றும் திமுக ஆட்சிக்கு முன்பே எடுக்கப்பட்டவை, என்று தெரியவந்தது.
இதன்படி, முதல் மற்றும் கடைசி புகைப்படம், கடந்த 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒன்று. மெட்ரோ ரயில் திட்டப் பணி காரணமாக, சென்னை அண்ணா சாலையில் இவ்வாறு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதில், மாநகர பேருந்து ஒன்றும், கருப்பு நிற கார் ஒன்றும் சிக்கிக்கொண்டன.
இதற்கும், மழைக்கும் எந்த தொடர்பில்லை. மேலும், அப்போது திமுக ஆட்சியும் கிடையாது.

இதே செய்தியின் மற்றொரு படம் இதோ…

அடுத்தப்படியாக, 2வது புகைப்படம் கடந்த 2014ம் ஆண்டு முதலே இணைய தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கும், தற்போதைய திமுக ஆட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இறுதியாக, வெள்ளை கார் பள்ளத்தில் கிடப்பது போன்ற புகைப்படம், 2025ம் ஆண்டு மே மாதம், சென்னை திருவான்மியூரில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பானது. ஆனால், இதற்கும், பருவ மழைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

New Indian Express l Times of India
எனவே, வெவ்வேறு சம்பவம் தொடர்பான புகைப்படங்களை ஒன்றாக இணைத்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:ஐந்தாண்டு திமுக ஆட்சியில் தமிழக சாலைகள் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


