பீகாரில் தோற்றதால் கதறும் காங்கிரஸ் பொறுப்பாளர் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’பீகாரில் தோற்றதால் கதறும் காங்கிரஸ் பொறுப்பாளர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பீகாரில் மூத்த.. வயதான காங்கிரஸ் பொறுப்பாளரின்  கதறல்…😭😭😁😁படுமோசமான தேர்தல் தோல்வியால் அவமானம் தாங்க முடியாமல் கதறி கதறி துடித்து அழுதார். அந்தப் பப்பு பயலை நம்பி வந்ததுக்கு… கட்சியை காலி பண்ணி… நம்மள தெருவுல விட்டுட்டு.. வெளிநாட்டுக்கு ஓடிட்டான்…அவன் தங்கச்சியும் வெளிநாட்டுக்கு ஓடிட்டா…நாமதான் நடுத்தெருவுல நிக்கிறோம்…எத்தனை காலமா.. கட்டி காப்பாத்துன கட்சியை இந்த நாதாரி வந்து நாசமாக்கிட்டானே…!!??😭😭,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவுக்கும், சமீபத்திய பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று தெரியவந்தது. 

இதன்படி, கடந்த 2025, பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தலித் பெண் ஒருவர் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார். இதுபற்றிய செய்தியாளர் சந்திப்பில், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Awadhesh Prasad கதறி அழுதார்.  

Awadhesh Prasad அழுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது, கடந்த பிப்ரவரி மாதம். ஆனால், பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது நவம்பர் மாதம். 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

DNA India News l Times of India l India Today

எனவே, உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது பீகார் சட்டமன்ற தேர்தலுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:பீகாரில் தோற்றதால் கதறும் காங்கிரஸ் பொறுப்பாளர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply