
‘’நடிகர் விவேக் தாயார் இன்று இறந்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதில், நடிகர் விவேக் அவரது தாயாருடன் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ ஆழ்ந்த இரங்கல் செய்தி #நடிகர் விவேக் அவர்களின்.. தாயார் S.#மணியம்மாள் (86), இன்று இயற்கை எய்தினார்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். அப்போது, நடிகர் விவேக் தாயார் கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.

இதன்படி, ஜூலை 17, 2019 அன்று விவேக் தாயார் மணியம்மாள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அந்த செய்தியை எடுத்து, தற்போது 2020 ஜூலையில் நிகழ்ந்தது போல புதியதாக தகவல் பகிர்ந்து, ஃபேஸ்புக் பயனாளர்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

எனவே, 2019 ஜூலையில் நிகழ்ந்த சம்பவத்தை, 2020 ஜூலையில் நிகழ்ந்த போல, பழைய செய்தியை புதியதாக பகிர்ந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.
