FactCheck: திருமாவளவனுக்கு பெண் பார்க்கும் வன்னியரசு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’திருமாவளவனுக்கு பெண் பார்க்கும் வன்னியரசு,’’ என்று கூறி தந்தி டிவி லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, உண்மை என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்கான காரணம் பற்றி அவரே பலமுறை விளக்கம் அளித்தும் உள்ளார்.

OneIndia Tamil Link

அதேசமயம், அவர் மீது பெண் ஒருவர் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி திருமாவளவன் ஏமாற்றிவிட்டதாக, புகார் கூறி வருகிறார். அதுபற்றியும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

Vikatan News Link

இப்படிப்பட்ட சூழலில், திருமாவளவனுக்கு, அவரது கட்சியை சேர்ந்த மற்றொரு நிர்வாகி வன்னியரசு பெண் பார்க்க தொடங்கியுள்ளதாகக் கூறி, மேற்கண்ட நியூஸ்கார்டை சிலர் பரப்பி வருகின்றனர். இதில், தந்தி டிவி லோகோ இடம்பெற்றுள்ளதால், இதுபற்றி தந்தி டிவியின் ஆசிரியர்கள் குழுவில் விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’இது எங்களது பெயரில் பரப்பப்படும் போலிச் செய்தி,’’ என்று மறுப்பு தெரிவித்தனர்.

இதன்பேரில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:திருமாவளவனுக்கு பெண் பார்க்கும் வன்னியரசு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False