மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்- உண்மை என்ன?

அரசியல் கேரளா

‘’மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

இதில் பாஜக கொடி பிடித்தபடி சிலர் நடந்துசெல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய பாஜக அரசை எதிர்த்து கேரள பாஜகவினர் போராட்டம்,’’ என எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்ததில் இது 2010-11 காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட ஒன்று தெரியவருகிறது. இதில் இருப்பவர் வி.முரளீதரன். கேரள பாஜக தலைவராக 2010-15 ஆண்டுகளில் இருந்தவர். அப்போது, நிறைய போராட்டங்களை கேரளா முழுக்க நடத்தியுள்ளார். அதில் ஒன்றுதான் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை எதிர்த்து அவர் நடத்திய போராட்டமும். அந்த போராட்டத்தில் எடுத்த புகைப்படம்தான் இது.

இதுதொடர்பாக, அப்போதே பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அவற்றை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். இதில் முரளீதரன் அருகில் உள்ள தாடி வைத்த நபரை வைத்து புகைப்படம் பழையதுதான் என்று உறுதி செய்துகொள்ளலாம்.

AhmedabadMirror Link Archived Link 
TheNewIndianExpress Link Archived Link 

இந்த பழைய புகைப்படத்தை எடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ட்விட்டரில் கேலி செய்து கேரள காங்கிரஸ் ஆதரவு பக்கம் ஒன்றில் பகிர்ந்திருக்கின்றனர். அதனையே தற்போது சிலர் மறுபகிர்வு செய்ய தொடங்கியுள்ளனர்.

Twitter LinkArchived Link

இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு முதல் மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுவதை சுட்டிக்காட்டி, மலையாளம் ஒன் இந்தியா செய்தித்தளத்திலும் கூட செய்தி வெளியிட்டுள்ளனர்.

Malayalam One India LinkArchived Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 2010ம் ஆண்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மறுபகிர்வு செய்துள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் பற்றிய தகவல் தவறு என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்- உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False