மோடிக்கு வணக்கம் சொன்ன மம்தா பானர்ஜி- முழு உண்மை இதோ!

அரசியல் இந்தியா

‘’மோடியை மதிக்காத மம்தா பானர்ஜி, எவ்ளோ கெஞ்சியும் வணக்கம் வைக்கல,’’ என்ற தலைப்பில் வித விதமாக பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதேபோன்ற தகவலை மேலும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதுதொடர்பான வீடியோ கூட பகிர்வதைக் காண முடிகிறது. 

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆம்பன் புயல் கோர தாண்டவமாடியது. இதனால், அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று, மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை சேதத்தை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார்

இந்த சந்திப்பை ஒட்டி மம்தா பானர்ஜி மற்றும் மோடி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதைப் போலவும், மோடியை மம்தா மதிக்கவில்லை என்பது போலவும் கூறி பலவிதமான புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. 

முன்னணி ஊடகங்கள் தொடங்கி, சாமானிய பேஸ்புக் பயனாளர் வரை இதனை உண்மை என நம்பி தகவல் பகிர்வதைக் காண முடிகிறது. 

News18 LinkArchived Link

உண்மை என்னவெனில், பிரதமர் மோடி தரையிறங்கும்போது மம்தா கையில் பேப்பர் ஒன்றை வைத்தபடி தீவிர ஆலோசனையில் உள்ளார். பிறகு, மோடி அவர் அருகில் வந்து வேண்டுமென்றே சில முறை வணக்கம் சொல்ல, பதிலுக்கு மம்தாவும், சில முறை வணக்கம் சொல்கிறார். இதுபற்றிய வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது. 

Archived Link 

இதுபற்றிய புகைப்படத்தை மீண்டும் ஒருமுறை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம். 

இதேபோல, மோடியை மதிக்காமல் மம்தா தனியாக நடந்துசெல்ல, அவரை பின்தொடர்ந்து மோடி நடந்துசெல்ல நேரிட்டது, என்றும் சிலர் தகவல் பகிர்வதைக் கண்டோம். இதுவும் தவறான தகவல்தான். 

கொரோனா சமூக இடைவெளி காரணமாக, மோடி, மம்தா இருவருமே சற்று இடைவெளி விட்டே செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகிறார்கள். 

Archived Link 

மோடி மட்டுமல்ல, செய்தியாளர்களை சந்திக்கும்போதுகூட மம்தா பானர்ஜி சற்று தள்ளியே நிற்பதைக் காண முடிகிறது. 

Archived Link 

எனினும், மோடியை சந்தித்தது பற்றி மம்தாவோ அல்லது மம்தாவை சந்தித்தது பற்றி மோடியோ, இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை. அதன் அடிப்படையில்தான், இருவருக்கும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடு இருக்கலாம் என்று கூறி பலரால் தகவல் பகிரப்படுகிறது. 

நம்மைப் பொறுத்தவரை மோடிக்கு மம்தா வணக்கம் வைக்கவில்லை என்று பகிரப்படும் தகவல் தவறாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். மற்றபடி அரசியல் காரணங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் முழு உண்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான தகவல் கொண்ட செய்தி, புகைப்படம் அல்லது வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். ஒருவேளை இத்தகைய சந்தேகமான தகவல்களை காண நேரிட்டால் எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:மோடிக்கு வணக்கம் சொன்ன மம்தா பானர்ஜி- முழு உண்மை இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False