
‘‘திமுக 160 தொகுதிகளில் வெற்றி பெறும், என இந்தியா டுடே ஊடகம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ #இந்தியா_டுடே தேர்தல் வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு.. திமுக 160 தொகுதிகளில் வெற்றி பெறும்.
நம் இலக்கு 200 அதை வென்றே தீருவோம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்தியா டுடே ஊடகம் ஏப்ரல் 29 அன்று மாலை 6 மணிக்கு, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, Exit Poll வெளியிட உள்ளதாக, தெரியவந்தது.
இதன்மூலமாக, இந்த கட்டுரை வெளியிடும் வரையிலும் இந்தியா டுடே ஊடகம் தமிழ்நாடு தொடர்பாக, Exit Poll எதுவும் வெளியிடவில்லை என்று நமக்குத் தெளிவாகிறது.

அடுத்தப்படியாக, நாம் ஆய்வு செய்யும் பதிவில் இடம்பெற்றுள்ள இந்தியா டுடே வீடியோவை மீண்டும் பார்த்தோம். அதில், 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவு மற்றும் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் பற்றியும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பற்றியும் தொகுப்பாளர் பேசுகிறார்.
எனவே, வேறொரு வீடியோவை எடுத்து, இந்தியா டுடே Exit Poll என்று குறிப்பிட்டு, வதந்தி பரப்புகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


