‘Vijay Wave’ என்று Frontline ஊடகம் அட்டைப்படம் வெளியிட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘‘Vijay Wave’ என்று அட்டைப்படம் வெளியிட்ட Frontline ஊடகம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ VIJAY WAVE. FRONTLINE,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட அட்டைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம்.  இதுபற்றி Frontline magazine ஆசிரியர் குழுவில் கேட்டபோது, ‘’இது தவறான படம். நாங்கள் இவ்வாறு எந்த அட்டைப்படமும் வெளியிடவில்லை. தவெக ஆதரவாளர்கள் இந்த வதந்தியை பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர். 

மேலும், Frontline ஊடகத்தின் அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்திலும் இதுதொடர்பாக மறுப்பு கூறப்பட்டுள்ளதைக் கண்டோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அட்டைப்படம், போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Result Stamp

Title: ‘Vijay Wave’ என்று Frontline ஊடகம் அட்டைப்படம் வெளியிட்டதா?

Written By: Pankaj Iyer

Result: False

Leave a Reply