மோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்?

Coronavirus அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கேற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பினராயி விஜயன் அறை விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, விளக்கொளியின் முன் அமர்ந்திருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், தமிழக கம்யூனிஸ்டுக கவனத்திற்கு… பினராயி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Premnath OM VainavShaiva என்பவர் ஏப்ரல் 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.  பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பதிவின் எந்த இடத்திலும் மோடியின் அழைப்பை ஏற்று பினராயி விஜயன் விளக்கேற்றினார் என்று குறிப்பிடவில்லை. ஆனால், தமிழக கம்யூனிஸ்டுகளின் கவனத்திற்கு என்று குறிப்பிட்டு இந்த படத்தை பகிர்ந்திருப்பதன் மூலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயனே விளக்கேற்றிவிட்டார். தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் மோடியின் அழைப்பை விமர்சிப்பது ஏன் என்று கூறும் வகையில் உள்ளது.

இந்த படத்தை மோடியின் அழைப்பை ஏற்று நாடு முழுக்க வீடுகளில் விளக்கேற்றிய பிரபலங்கள் என்ற போட்டோ ஆல்பத்தில் நியூஸ் 18 கூட பயன்படுத்தி இருந்தது. republicworld என்ற இணையதளமும் இந்த படத்தை வெளியிட்டிருந்தது எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

republicworld.comArchived Link 1
news18.comArchived Link 2

பினராயி விஜயன் விளக்கேற்றியது உண்மையா என்று அறிய கூகுளில் தேடினோம். அப்போது, 5ம் தேதி இரவு 9 மணிக்கு பினராயி விஜயன் இல்லத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும் அவரது இல்லத்தில் பணி புரிந்தவர்கள் டார்ச் லைட்டை ஒளிரவிட்டதாகவும் செய்திகள் கிடைத்தன. ஆனால், படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இவை அனைத்தும் ஒரு செய்தி ஏஜென்ஸி வெளியிட்ட செய்தியாகவே இருந்தது.

பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டபோது அவர் விளக்கு அணைத்ததாகவோ, மெழுகுவர்த்தி ஏற்றியதாகவே எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை.

mathrubhumi.comArchived Link

எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அப்போது, இந்த படம் 2018ல் எடுக்கப்பட்டது என்றும், இது தொடர்பாக malayalam.factcrescendo.com வெளியான கட்டுரையையும் அளித்தனர்.

prd.kerala.gov.inArchived Link 1
Facebook LinkArchived Link 2

மேலும் இந்த படத்தை 2018ம் ஆண்டு கேரள அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டதற்கான இணைப்பை செய்தியில் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.

2018ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி வெளியான மலையாள நாளிதழ் ஒன்றின் முதல் பக்கத்தில் அந்த புகைப்படம் இடம் பெற்றது தொடர்பான பதிவையும் அளித்தனர். அந்த இணைப்புகளைப் பார்த்தோம்.

அதில், 2018ம் ஆண்டு பூமி தினத்தையொட்டி விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி ஒளியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி, மகள், பேரன் உள்ளிட்டோர் இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில், பினராயி விஜயன் மோடியின் அழைப்பின் பேரில் 2020ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்கை அணைத்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்?

Fact Check By: Chendur Pandian 

Result: False